Nov 8, 2008

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்?

எவரொருவர் தூக்கத்தினாலோ அல்லது மறதியாலோ ஒரு குறிப்பிட்ட தொழுகையை தொழவில்லையோ அவர் தூங்கி எழுந்தவுடன் அல்லது ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.

அபூ கதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்: - தொழுகை நேரத்தில் துங்குவதைப்பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது தூக்கத்தில் கவனக்குறைவு இல்லை. ஆனால் கவனக் குறைவு என்பது விழித்திருக்கும்போது ஏற்படுவதாகும் என்று பதிலளித்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: - யாராவது மறதியினால் தொழுகையை விட்டுவிட்டால் அவர் ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும் அதற்கு பரிகாரம் எதுவும் இல்லை.

முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்: - வித்ரு தொழுகையை உங்களின் இரவின் கடைசி தொழுகையாக ஆக்குங்கள்.

ஸஜ்தா செய்வதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள்: -

1) சூரியன் அடிவானில் உதயமாவதில் இருந்து அது முழுமையாக உதயமாகும் வரை உள்ள நேரங்கள்.

2) சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது.

3) சூரியன் அடிவானில் மறைய ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக மறையும் வரை உள்ள நேரம். (ஆதாரம் : அஹ்மத் மற்றும் முஸ்லிம்)

மேற்கண்ட மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னுடைய இறைவனுக்காக ஸஜ்தா செய்வதற்கு எந்த தடையும் இல்லை. எனவே மேலே சொன்ன மூன்று நேரங்களை தவிர்த்து ஒரு விடுபட்ட தொழுகையை ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.