May 26, 2008

சொர்க்கத்தின் இன்பங்கள் - பகுதி 2

நிரத்தரமான மறுவாழ்வு: -

இந்த உலகத்தின் சுகபோகங்கள் நிலையற்றவை. ஆனால் மறு உலகத்தின் சுகங்களோ எப்போதும் நீடித்திருக்கிற, நிலையான ஒன்றாகும். இந்த உலகத்தில் மனிதன் அடையக்கூடிய சுகங்கள் சிறிது காலத்திற்கோ அல்லது சலிப்படையச் செய்யக் கூடியதாகவே உள்ளது. ஆகையால் வேறு ஒரு நல்ல சுகத்தை தேட முயற்சி செய்கிறான். ஆனால் மறு உலகத்தில் உள்ள சுகங்கள் எப்போதும் நிலைத்திருக்கிற, ஒருபோதும் சலிப்படையக் கூடியதாக இருக்காது.

அல்லாஹ் கூறுகிறான்: -

‘உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!’ என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு ‘எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக:

‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.’ (அல்-குர்ஆன் 4:77)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும். அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை. இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும். காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும். (அல்-குர்ஆன் 13:35)

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:96)

38:54 ‘நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு (என்றும்) முடிவே இராது’ (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 38:54)

உன்னதமான மகிழ்ச்சி: -

சொர்க்கவாசிகளின் சந்தோஷங்களான, அவர்களின் உடைகள், உணவு, குடிபானங்கள், ஆபரணங்கள் மற்றும் மாளிகைகள் எல்லாம் மிக உன்னதமாக இருக்கும். அவற்றை இந்த உலகத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.

சொர்க்கத்தில் ஒருவர் தலை வைத்து வணங்கக் கூடிய இடமானது, இந்த உலகத்தில் சூரியன் உதிக்கும் எல்லா இடத்தையும் விட சிறந்ததாக உள்ளது என்று முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். (மிஷ்காத்)

அசுத்தங்களில் இருந்து விலகி இருத்தல்: -

சொர்க்கம், இந்த உலகத்தின் அசுத்தங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. இந்த உலகத்தில் நாம் சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ அது தேவையில்லாத அசுத்தத்தை வெளியேற்றக் கூடியதாக இருக்கிறது. இந்த உலகத்தில் மதுபானம் குடித்தால் தன்னை மறந்து விடுவான். பெண்களுக்கு மாத விலக்காகிறது, குழந்தை பிறக்கிறது. அது அவர்களுக்கு வேதனையை உண்டாக்குகிறது. சொர்க்கமானது இது போன்ற மன நிம்மதியின்மையில் இருந்து வேறுபட்டுள்ளது.

சொர்க்கத்தில் மது: -

(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். (அல்-குர்ஆன் 37:46-47)

சொர்க்கத்தில் தண்ணீர் மற்றும் பால்: -

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்-குர்ஆன் 47:15)

சொர்க்கத்தில் உள்ளவர்கள் அசுத்தங்களை எவ்வாறு வெளியாக்குவார்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது: “அவர்களின் தோலின் வழியாக வியர்வை வெளியாகும் அது கஸ்தூரியின் வாசனையைப் போன்று இருக்கும். அனைவருடைய வயிரும் மெலிந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள் (இப்னு ஹப்பான்)

இங்கே சொல்லப்பட்ட உவமானங்கள் எல்லாம் நாம் சொர்க்கத்தின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்வதற்காக. ஆனால் அதன் உண்மையான சந்தோஷத்தை இறைவன் மறைத்து வைத்துள்ளான்.

32:17 அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (அல்-குர்ஆன் 32:17)

சொர்க்கத்துக்கு உவமனம் ஏதுமில்லை: -

சொர்க்கத்தின் சந்தோஷங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், மனிதர்களால் அதைப்பற்றி அறிந்துகொள்ள முடியாது. பிரகாசிக்கும் விளக்குகள், நறுமனம் வீசும் தாவரங்கள், உயர்ந்த மாளிகைகள், ஓடக் கூடிய ஆறுகள், கனிந்த பழங்கள், அழகான மனைவி, அதிகமதிகமான உடைகள் அழகாக கட்டப்பட்ட உயர்ந்த வீடுகள் (இப்னு மாஜா)

சொர்க்கத்தின் வீடுகளைப்பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது தங்கம், வெள்ளியிலான செங்கல், கஸ்தூரியின் கலவை, முத்து பவளங்களின் கற்கள், குங்குமபூவின் மணல் அதில் உள்ளே நுழைபவர் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் அடையமாட்டார். இறப்பு என்பதே கிடையாது. அவர்களுடைய ஆடைகள் கிழிந்து போகாது எப்போதும் இளமையுடன் இருப்பார்கள். (அஹமது)

அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (அல்-குர்ஆன் 76:20)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (அல்-குர்ஆன் 32:17) இறைவன் கூறியுள்ள விஷயங்கள் குறைந்தது தான். அவன் கூறாத விஷயங்கள் இன்னும் அதிகம் உள்ளது (முஸ்லிம்)

சுவர்க்கத்தைப் பற்றியும் அதனுடைய சந்தோசத்தைப் பற்றியும் இறைவனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

ஆங்கில மூலக்கட்டுரை : http://www.islamreligion.com/articles/10

சொர்க்கத்தின் இன்பங்கள் - பகுதி 1

சொர்க்கத்தின் உண்மைத் தன்மையை, அதில் நுழையாதவரை, மக்கள் அதைப் பற்றி எப்போதும் உணர்ந்த்து கொள்ள முடியாது. அல்லாஹ்தஆலா சொர்க்கத்தைப் பற்றி சொல்லும் போது, அது படைக்கப்பட்டதன் நோக்கம், அங்கே மக்கள் அனுபவிக்கக் கூடிய மட்டற்ற மகிழ்ச்சி எல்லாம் தற்போது வாழக் கூடிய வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என விவரிக்கிறான்.

மேலும், மனிதர்களுக்கு இறைவன் அளிக்கக்கூடிய சொர்க்கத்தைப் பற்றியும் அதன் அருட் கொடைகளைப் பற்றியும், அதன் அழகைப் பற்றியும் குர்ஆன் கூறிக் கொண்டு இருகிறது. அது மறுமை வாழ்வுக்காக இறைவனால் தயார் படுத்தப்பட்டிருக்கின்றது என்றும், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வகையான நல்லவைகளும் அவர்களுக்கு உண்டு என்ற தகவலையும் சொல்கிறது.

மேலும் அது அனைத்து வகையான அருட்கொடைகளும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் ஆன்மாக்கள்/இதயங்கள் விரும்பக்கூடிய அனைத்தும் கிடைக்கும் என்றும் அவர்களின் இதயங்களில் இருந்து கோபதாபங்கள், கவலைகள், மன வருத்தங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும் என்றும் சொல்கிறது. இறைவன் இதுபோன்ற ஒரு அருட்கொடையை உண்டாக்கி, மறுமை நாளில் தான் விரும்பக் கூடியவர்களுக்கு அளிப்பதற்காக தயாரித்து வைத்துள்ளான்.

சொர்க்கத்தின் மட்டற்ற மகிழ்ச்சி என்பது என்ன? அது எவ்வாறு இந்த உலக மகிழ்ச்சியில் இருந்து வேறுபடுகிறது என்பது பற்றி ஒரு சில உதாரணங்ளோடு பார்ப்போம்.

வேதனை, துன்பம் இல்லாத மட்டற்ற மகிழ்ச்சி: -

மனிதர்கள் இந்த உலகத்தில் சந்தோஷம் அடைகின்ற அதே நேரத்தில், கடுமையான உழைப்பு மற்றும் வேதனையையும் அடைகின்றனர். ஒருவரின் இந்த உலக வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர் அடைந்த சுகத்தை விட அடைந்த கஷ்டங்களின் அளவு கூடுதலாகத் தான் இருக்கும். ஆனால் மறுமை வாழ்க்கையைப் பொறுத்த வரையில் முழுமையான மகிழ்ச்சி, சந்தோஷத்தை தவிர கஷ்டங்களையோ, துன்பங்களையோ சிறிதும் அனுபவிக்க மாட்டார்கள். அனைத்து வகையான வேதனை, துன்பங்களும் மறு உலகத்தில் இல்லாமல் போய் விடும். இது சம்பந்தமாக ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

சொத்து சுகங்கள்: -

மனிதன் தான் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு, அடிப்படை தேவையான பணம், ஆபரணங்கள், விலை உயர்ந்த கார் மற்றும் ஆடைகள், ஆடம்பர வீடுகள் போன்றவற்றை மாய வித்தைகள் செய்தாவது அடைய முயற்சிக்கிறான். மேலும் அதுதான் வாழ்க்கையின் வெற்றி என்றும், நினைக்கிறான். அதிகமான மக்களுக்கு வெற்றி என்பது சொத்து சுகங்களோடு சம்பந்தபட்டது என்று நினைக்கின்றனர். அது உண்மைக்கு புறமானதாக இருந்த போதிலும் மிகப்பெறும் செல்வந்தர்கள், எவ்வளவு துக்ககரமான வாழ்க்கையை கடைபிடித்துள்ளார்கள் என்று நாம் பல தடவைகள் பார்த்திருக்கிறோம். சில சமயம் அது அவர்களை தற்கொலையின் பக்கம் கூட இட்டுச் செல்கிறது. சொத்து என்பது, என்ன விலை கொடுத்தாவது அடையக்கூடிய, மனிதனின் இயற்கையான வேட்கை ஆகும். இந்த விருப்பம் பூர்த்தி அடையாத போது மனிதனை துன்பமடைய செய்கிறது. இந்த காரணத்தினால் தான் இறைவன் சொர்க்க வாசிகள், அவர்கள் கற்பனை செய்த அனைத்து வகையான சொத்து சுகங்களையும் பெறுவார்கள் என்று குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், ‘நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!’ (என அவர்களிடம் சொல்லப்படும்.) (அல்-குர்ஆன் 43:71)

‘சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்’ (என அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 69:24)

அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று. (அல்-குர்ஆன் 18:31)

நோயும் மரணமும்: -

இந்த உலக வாழ்க்கையில் உள்ள வேதனையில் ஒன்று தான், தான் விரும்பியவர்களின் நோயும் மரணமும், ஆனால் சுவர்க்கத்தில் இவை இரண்டுமே இல்லை. யாரும் நோய் வாய்ப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி கூறும்போது: -

“அவர்கள் ஒருபோதும் நோய் வாய்ப்பட மாட்டார்கள், மூக்குச் சிந்தவோ எச்சில் துப்பவோ மாட்டார்கள்” (புகாரி)

சமுதாய உறவுகள்: -

சுவர்க்கவாசிகள், தீய மற்றும் வேதனை தரக் கூடிய விமர்சனங்களையோ பேச்சுக்களையோ ஒரு போதும் கேட்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் அழகிய மற்றும் அமைதியான பேச்சுக்களையே கேட்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). (அல்-குர்ஆன் 56:25-26)

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: ‘இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்’ (இதற்கு பதிலாக, ‘பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். (அல்-குர்ஆன் 7:43)

சுவர்க்கத்திலே ஒருவருக்கொருவர் வெருப்புக்களோ, மனக்கசப்புக்களோ அடைய மாட்டார்கள். அவர்களுடைய இதயங்கள் ஒன்றுபோல இருக்கும். அவர்கள் இறைவனை காலையிலும், மாலையிலும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

சுவர்க்கத்திலே அவர்கள் மிகச்சிறந்த தோழர்களோடு இருப்பார்கள்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (அல்-குர்ஆன் 4:69)

சொர்க்கவாசிகளின் இதயங்கள் சுத்தமானதாகவும், அவர்களுடைய பேச்சுக்கள் அழகாகவும், அவர்களுடைய செயல்கள் சரியானதாகவும் இருக்கும். அங்கே தீங்கு தரக்கூடிய, வேதனை ஏற்படுத்தக் கூடிய, கோப மூட்டக் கூடிய பேச்சுக்கள் இருக்காது.

ஆங்கில மூலக்கட்டுரை : http://www.islamreligion.com/articles/11/

தொடர்ச்சி : சொர்க்கத்தின் இன்பங்கள் - பகுதி -2

ஷஹீதுடைய அந்தஸ்தை அடைவது எப்படி? - Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
ரியாளுஸ் ஸாலிஹீன் விளக்கங்கள்
இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா
நாள் : 09-05-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தல்! - Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
வாராந்திர பயான் நிகழ்ச்சி
இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா
நாள் : 14-05-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

கனவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்! - Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
வாராந்திர பயான் நிகழ்ச்சி
இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா
நாள் : 21-05-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன்னால் உள்ள மார்க்கங்களின் நிலை

வானம், பூமி மற்றும் இவைகளுக்குகிடையே உள்ள எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏக மனதாக நம்பிக்கைக் கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே ஒருவன் தான் நமக்கு நேர்வழி காட்டி நம்மை மோட்சம் அடைய செய்வதற்கு தகுதியானவனாக இருக்க முடியும். எனவே உண்மையான மார்க்கம், வாழ்க்கை நெறி போன்றவைகள் படைப்பாளனாகிய அந்த ஒருவனிடம் இருந்தே தான் வர வேண்டும்.

படைப்பாளனாகிய அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. எனவே அவனை அந்த அழகிய பெயர்களான கடவுள், இறைவன், மாலிக், பகவான் இப்படி எதை வேண்டுமானாலும் அழைக்கலாம். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை என்று உறுதியாக நம்ப வேண்டும் என்பது ஒன்று தான் மிக முக்கியமான விஷயம். படைப்பாளன் ஒருவன் தான். ஆகையால் நம்முடைய வணக்கங்கள் அனைத்தும் அவன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது.

நம்மை படைத்தவன், முதல் மனிதனை படைத்ததில் இருந்து மனிதர்கள் மோட்சம் அடைவதற்காக தன் புறத்தில் இருந்து வேதங்களை தான் தேர்ந்தெடுத்தவர்கள் மூலம் தொடர்ந்து அனுப்பினான். இப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், படைத்தவனின் தூதுவத்தை உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் அவர்கள் பேசுகின்ற மொழியில் எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டார்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே இறைவனை வணங்க வேண்டும்; அவனுக்கு எந்த துணையையும் கற்பிக்கக்கூடாது என்பது தான் அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொன்ன ஒரே முக்கியமான தூது செய்தியாகும்.

காலங்கள் உருண்டோட, அந்த தூதர்களின் போதனைகள் மறக்கப்பட்டோ அல்லது மனிதர்களால் மாற்றப்பட்டோ விட்டன. அவைகள் பல்லாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்தது. உலகம் முழுவதும் ஒரே வட்டத்துக்குள் வந்த போது தொழில் நுட்பங்கள் தகவல் பரிமாற்றங்கள் மூலம் செய்திகள் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும் என்ற நிலை வந்த போது இறைவன் தன்னுடைய கடைசி வேதத்தை இறுதி தூதர் மூலமாக அனுப்பினான். முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி தூதராகவும், புனிதமான திருக் குர்ஆனை இறுதி வேதமாகவும் முஸ்லிமாகிய நாங்கள் நம்புகிறோம். ‘உலகம் முடியும் வரை உள்ள எல்லா மனித இனத்துக்கும் ஒளி விளக்காக இந்த திருக்குர்ஆன் உள்ளது’ என்று இறைவன் கூறி உள்ளான். மேலும் இந்த குர்ஆனை மாற்றவோ, இதில் எதையும் சேர்க்கவோ இயலாதவாறு பாதுகாப்பதற்கு இறைவனே பொறுப்பேற்றுக் கொண்டான்.

முஸ்லிமாகிய நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த திருகுர்ஆன், ஒரே இறைவனால் வழங்கப்பட்டது என்று நம்புகிறோம். மேலும் இந்த குர்ஆன், இதுவே கடைசி வேதம் என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு உலக முடிவு நாள் வரை, வேறு தூதர் வரமாட்டார் என்றும் கூறுகிறது. ஆகவே முஸ்லிமாகிய நாங்கள், முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எந்த மார்க்கத்தையும் நம்புவதில்லை.

ஆகையால், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி தூதர் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தை இறுதி வேதம் என்று நான் கூறுவது ஒரு தலைப்பட்சமாக உங்களுக்குத் தோன்றலாம். இதை உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ வேண்டுமெனில், நேர்மை உள்ளம் கொண்ட உங்களைப் போன்றவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், குர்ஆனை படித்து, இது இறைவனால் வழங்கப்பட்டதா அல்லது மனிதர்களால் எழுதப்பட்டதா என்று முடிவு செய்ய வேண்டியது தான். முழு குர்ஆனையும் படித்த பிறகு தான் நான் கூட இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறினேன். குர்ஆன் படிப்பதற்கு இலகுவானதும் எல்லாவற்றையும் தெளிவாக, சுருக்கமாக விவரிப்பதாகவும் உள்ளது.

குர்ஆனில் இறைவன் மனித குலம் அனைத்துக்கும் சவால் விடுகின்ற ஒரு குர்ஆன் வசனத்தை கூறுகிறேன். அந்த சவால் 1400 வருடங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (அல்-குர்ஆன் 2:23-24)

இஸ்லாத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கும் உங்களின் முயற்சியை நாங்கள் வரவேற்பதுடன் இறைவன் உங்களுக்கு அவனுடைய நேரிய வழியைக் காட்ட வேண்டுமென பிரார்த்திக்கின்றோம். ஒருவரின் உண்மையான தேடல் சத்தியத்தை நோக்கியும், உண்மையான இறைவனை அடைவதற்காகவும் இருக்குமானால் அவர் அதை அடைந்து கொள்வதற்கு இறைவன் உதவி செய்வதாக தன்னுடைய திருமறையிலே வாக்களித்திருக்கின்றான்.

இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு உங்களுக்காக உதவ நாங்கள் காத்திருக்கின்றோம்.

நன்றி : இஸ்லாம் ஹெல்ப்லைன்.காம்

May 24, 2008

இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.

பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.

அவைகள்: -

1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.

2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)

இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.

அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.

ஜோதிடக் கலை: -

இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும் ஒரு கல்வியாகும்.

ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்: -

1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.

இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.

2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.

இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.

இராசிப்பலன்கள்: -

ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.

படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.

எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -

1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு
2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.

ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.

ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.

ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?

ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின் இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.

ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

அல்லஹ் நட்சத்திரங்களை மூன்று காரணங்களுக்காக படைத்திருக்கின்றான்.

1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும்
2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்
3) கப்பலில் வழி காட்டியாகவும்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -

“யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று வலியுறுத்திக் கூறுகிறது.

எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது “இறைவனைத்’ தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்” என கூறுவது போலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)

அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.

May 20, 2008

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் : பகுதி 2 – பெண்ணுரிமை

1a) இஸ்லாத்தின் மீது பரப்பப்படும் அவதூறுகள்: -

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் போதிக்கப்பட்ட தீனுல் இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்தனர், மேலும் இன்றளவும் இணைந்து வருகின்றனர். இதைப் பொறுக்க இயலாத மேலை நாட்டுச் சக்திகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் மேற்கத்திய ஊடகங்களின் உதவியுடன் இஸ்லாத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சேற்றை வாரியிரைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அவர்களால் இஸ்லாத்தின் மீது கூறப்படும் அவதூறுகளில் ஒன்று தான் இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்துகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய காலக்கட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பன்டைய காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவலமானவர்களாகவும், சொத்துரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் போகப்பொருளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், இஸ்லாம் மட்டுமே பெண்களை: -
- கண்ணியப் படுத்தி கௌரவித்தது
- சொத்துரிமை வழங்கியது
- சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.

இஸ்லாத்தைப் பற்றி அவதூறு கூறும் மேலை நாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் காலங்காலமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்பட்டதற்கு தங்களின் புனித வேத நூலான பைபிளில் கூறப்படும் கருத்துக்களே காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். அல்லது மறைத்து விடுகின்றனர்.

கட்டுரையின் இந்தப் பகுதியில் பெண்களின் உரிமைகள் மற்றும் அந்தஸ்து குறித்து பைபிள் மற்றும் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.

1b) முதல் பாவத்திற்கு காரணம் ஒரு பெண்ணே!

பழைய ஏற்பாடு, ஆதியாகமம் , 3 அதிகாரம்

6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

10. அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

11. அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

12. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

13. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

மேற்கண்ட பைபிளின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்: -

1) கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நம்பிக்கையான ‘முதல் பாவத்திற்கு’ ஒரு பெண்ணே காரணம்
2) அந்த பாவத்தின் காரணமாக பெண்கள் பிரசவ வலியினால் அவதியுறுவார்கள் என கடவுளால் தண்டனைக் கொடுக்கப்பட்டனர்.
3) பெண்ணின் பேச்சைக் கேட்டதினால் ஆதாம் (அலை) அவர்கள் தவறிழைத்தார்கள்
4) ஆதாமும் அவருடைய சந்ததியினரும் அவர்களுடைய கணவனின் கட்டளைக்கு அடிபணிந்து கிடக்க வேண்டும்.
5) ஏவாளை ஏமாற்றியதற்காக சர்ப்பம் சாபத்திற்குள்ளாகி தனது வயிற்றால் நகர்ந்து மண்ணைத் தின்கிறது.
6) மனிதர்களுக்கும் சர்ப்பத்திற்கும் பகை ஏற்பட்டு மனிதர்களால் சர்ப்பம் கொல்லப்படுவதற்கும், சர்ப்பம் மனிதர்களின் காலைக் கடிப்பதற்கும் இந்த நிகழ்ச்சியே காரணம்.

இனி, ‘பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது’ என கிறிஸ்தவ மிஷனரிகள் கூறுகின்ற அல்-குர்ஆன்’ இந்த நிகழ்ச்சி குறித்து என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.

அல்-குர்ஆன் அத்தியாயம் 7, ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)

7:19 (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) ‘ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்’ (என்று அல்லாஹ் கூறினான்).

7:20 எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, ‘அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை’ என்று கூறினான்.

7:21 ‘நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்’ என்று சத்தியம் செய்து கூறினான்.

7:22 இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: ‘உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?’ என்று கேட்டான்.

7:23 அதற்கு அவர்கள்: ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’ என்று கூறினார்கள்.

7:24 (அதற்கு இறைவன், ‘இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு’ என்று கூறினான்.

7:25 ‘அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்’ என்றும் கூறினான்.

மேற்கண்ட அல்-குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்: -

1) ஷைத்தான் ஆதாம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) அவர்கள் இருவரையுமே ஏமாற்றினான். பைபிள் கூறியது போன்று ஹவ்வா (அலை) அவர்கள் தான் தவறிழைத்தற்கு முதற் காரணமல்ல.
2) பைபிளில் கூறப்பட்ட தண்டணைகளான ‘பெண்களுக்குப் பிரசவ வலி’, ‘பெண்கள் புருஷன் மார்கள் பெண்களை ஆண்டு கொள்ளுவான்’, பாம்பு மண்ணைத் தின்கிறது போன்ற அபத்தங்கள், பெண்களை இழிவு படுத்தும் வாசங்கள் அல்-குர்ஆனில் இடம் பெறவில்லை.

கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் சிந்தனைக்காக சில கேள்விகள்: -

1) பெண்கள் தான் ஏவாளின் தவறுக்காக பிரசவ வலியால் அவதிப்படுகிறார்கள் என்றால் மற்ற உயிரினங்கள் அனைத்தும் என்ன பாவத்திற்காக பிரசவத்தின் போது அவதிப்படுகின்றன?

2) ஏவாள் செய்த தவறுக்கு தற்காலத்தில் வாழும் பெண்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

3) பெண்கள் தமது கணவனின் அடிமைகளா? அவர்களுக்கென்று உணர்ச்சிகளில்லையா?

4) சர்ப்பம் மட்டும் தானா தனது வயிற்றால் ஊர்கின்றது? ஊர்வனவற்றில் மற்ற எந்தப் உயிரினங்களும் தனது வயிற்றால் ஊர்வதில்லையா? மேலும் சர்ப்பம் மண்ணைத் தான் தின்கின்றதா?

தயவு செய்து சிந்தித்து விடை காண முன்வாருங்கள்.

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் : பகுதி 1 - முன்னுரை

இஸ்லாம் புதிய மார்க்கமன்று: -

அன்பிற்கினிய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! இஸ்லாம் மார்க்கம் என்பது மேற்கத்திய உலகத்தில் பெரும்பாலோர் எண்ணியிருப்பது போல, அல்லது முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதர சகோதரிகள் நினைப்பது போல முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புதிய மார்க்கமன்று. முதல் இறைத்தூதர் ஆதாம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நோவா (அலை), ஆப்ரஹாம் (அலை), மோஸஸ் (அலை), தாவிது (அலை), சுலைமான் (அலை), இயேசு (அலை) போன்ற இறைத்தூதர்களின் வரிசையில் வந்த இறைவனின் இறுதித் தூதர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

மனிதக் கரங்களால் மாசுபட்ட முந்தைய வேதங்கள்: -

இறைவன் முந்தைய இறை தூதர்களுக்கு அருளியது போன்றே முஹம்முது நபி (ஸல்) அவர்களுக்கும் தனது இறுதி வேதத்தைஅருளினான். முந்தைய நபிமார்களுக்கு அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்திலும் மனிதக் கரங்கள் ஊடுருவி சுய இலாபங்களுக்காகவும், தம்முடைய சிற்றறிவுக்கு ஏற்றவாறும் மனிதர்கள் இறைவனின் வேத வசனங்களோடு தம் சொந்தக் கற்பனைகளையும் சேர்த்து அவற்றை இறைவனின் வசனங்கள் என்று மக்களிடம் கூறிவரலாயினர். இதையே இறைவனின் இறுதிவேதமான அல்-குர்ஆன் கூறுகிறது: -

அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்-குர்ஆன் 2:79)

இறைவனால் பாதுகாக்கப்படும் அல்-குர்ஆன்: -

முந்தைய வேதங்கள் மனிதக் கரங்களினால் மாசுபட்டதினால் இறைவன் அருளிய இறுதிவேதத்தைத் தாமே பாதுகாப்பதாக கூறுகிறான் நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 15:9)

எதிர்கொள்ள முடியாத இறைவனின் சவால்: -

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (அல்-குர்ஆன் 10:37)

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று. (அல்-குர்ஆன் 10:37-38)

அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்? ‘(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 11:13)

(நபியே! நீர் இதைக் கூறும் போது:) ‘இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்’ என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: ‘நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.’ (அல்குர்ஆன் 11:35)

முரண்பாடுகளற்ற அல்-குர்ஆன்: -

இறைவனிடமிருந்து வந்ததால்தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுகிறது.

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82 )

இந்தக் கட்டுரையின் நோக்கம்: -

நபி (ஸல்) அவர்களின் காலம் முதற்கொண்டு இன்றளவும் கிறிஸ்தவ மிஷனரிகளால் பரப்பப்படும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் அல்-குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதாகும். இதற்கு காரணம் என்னவெனில் பைபிளில் காணப்படும் அநேக வரலாற்று நிகழ்ச்சிகள் அல்-குர்ஆனிலும் காணப்படுவதாகும். ஆனால் அந்த வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் விதத்தில் அல்-குர்ஆனும் பைபிளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது என்பதை மறந்து விடுகின்றனர். அல்லது வேண்டுமென்றே மறைத்து விடுகின்றனர்.

உதாரணமாக, முந்தைய நபிமார்களை இறைவனின் திருப்தியைப் பெற்ற நல்லடியார்கள் என அல்-குர்ஆன் கூறுகிறது.

ஆனால் பைபிள் அந்த இறைத் தூதர்களை இழிவு படுத்தும் முகமாக அவர்களை விபச்சராரம் புரிந்ததாகக் கூறுகிறது.

இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் மனதால் நோவினைப் படுத்துவதற்கன்று. மாறாக இந்தக் கட்டுரை, “மேற்கத்திய ஊடகம் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளால் தொடர்ந்து செய்யப்படும் பொய்பிரச்சாரத்தினால் அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாத்தைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு, அல்-குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதன்று; மாறாக அகில உலகின் இரட்சகனான அல்லாஹ்விடமிருந்து முஹம்மது நபி (ஸ்) அவர்களுக்கு மனித குலம் முழுமைக்கும் நேர்வழிகாட்டுவதற்காக அருளப்பட்ட அருள்மறை என்பதை தெளிவுபடுத்துவதற்காக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயம் பற்றி ஆராயப்படும் ஒரு ஒப்பாய்வாகும்”.

இந்தக் கட்டுரையில் காணப்படும் பைபிள் ஆதாரங்கள் யாவும் இணைய தளங்களில் கிறிஸ்தவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

இஸ்லாத்தின் ஆதாரங்கள் யாவும் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் எனப்படும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

இதில் தவறுகள் இருந்தால், தகுந்த ஆதாரஙகளோடு குறிப்பிட்டால் திருத்திக்கொள்வோம் என்பதைப் பணிவுடன் கூறிக்கொள்கிறோம்.

அடுத்து : 1) கிறிஸ்தவம் Vs இஸ்லாம் : பகுதி 2 – பெண்ணுரிமை

மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்

காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அல்லாஹ் தன்னுடைய மிகப் பெறும் கிருபையால் அனைத்து சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் மூலம் நிம்மதி அடைய முடியும் என்று அழைக்கச் செய்தான்.

உண்மையான அமைதி மற்றும் நிம்மதி என்பது, நம்மையும், வானம் பூமியையும் மற்றும் இதற்கிடையில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனை எப்போதும் நினைவு கூறுவதில் தான் உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -

13:28 (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள் மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

13:29 எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு. (அல்-குர்ஆன் 13:28-29)

ஆகையால் ஒருவர் அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதருடைய வழிமுறைகளை பின்பற்றாமல் தனக்கு தானே நிம்மதி அடைய முயற்சி செய்தால், அது அவன் பார்க்கின்ற, உணர்கின்ற சிலை வணக்கங்களின் பக்கம் அவனை இட்டுச் செல்லும். இதன் மூலம் அவன், அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற வெறுக்கத் தக்க குற்றத்தை செய்தவன் ஆகின்றான். அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்பது இஸ்லாத்தில் மிகப் பெறும் பாவமாகும் அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிலையில் மரணித்த ஒருவனை இறைவன் மன்னிக்க மாட்டான் மேலும் அவர்களுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கியும் விடுகிறான். முன்னால் வாழ்ந்த சமுதாயங்கள் அழிக்கப்பட்டதெல்லாம், அவர்களுக்கு தெளிவான அல்லாஹ்வின் போதனைகள் அவனுடைய தூதரின் மூலம் வந்த பின்பும், அதனை பின்பற்றாமல் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரும் பாவமான அவனுக்கு இணை வைத்தது தான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன் 4:48)

‘நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்’ என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: ‘இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை. (அல்-குர்ஆன் 5:72)

மக்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனித மற்றும் மிருகங்களின் சிலைகள், கப்ருகளில் உள்ளவர்களை அழைப்பது ஆகியவைகள் அனைத்தையும் செய்வதற்கு ஒரே காரணம் அவர்களின் மூதாதையர்கள் அவ்வாறு செய்த காரணத்தினால் தான். அவர்கள், இந்த சிலைகள் தம்மை படைக்கவும் இல்லை, தமக்கு எதையும் கொடுக்கவும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தனர். மேலும் இந்த உருவங்கள் தமக்கு வாழ்க்கையையோ சொத்து சுகங்களையோ, குழந்தைகளையோ, இறப்பையோ கொண்டு வருவதில்லை என்பதையும் அறிந்திருந்தனர். மனித இனம் முழுவதும் ஏக மனதாக, “நாம் அனைவரும் இந்த உலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனின் படைப்பிகள் தான்” என்பதை நம்பியிருந்தனர். இருந்த போதிலும் இவர்கள், தங்களுக்குத் தாங்களே கடவுளாக்கி கொண்டவர்களையும் மகான்களாக்கி கொண்டவர்களையும் சிரம் பணிந்து மன்றாடி, கையேந்தி வழிப்பட்டு வருகின்றனர். தங்கள் மூதாதையர் செய்ததால் தவிர வேறெந்த காரணத்தையும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

இஸ்லாம் என்பது குர்ஆனின் போதனைகள் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமே அல்லாமல், மூதாதையர்களின் வழிமுறைகளை பின்பற்றக்கூடிய மார்க்கமல்ல. இதை அல்லாஹ்வும் அவனுடைய திருமறையில் வலியுறுதிக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால் ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:170-171)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

அல்லது, ‘இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே! நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?’ என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம். (அல்-குர்ஆன் 7:173-174)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் ‘நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?’ என்று கேட்ட போது: அவர்கள், ‘எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (அதற்கு) அவர், ‘நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்’ என்று கூறினார். (அல்-குர்ஆன் 21:52-54)

இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!

அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: ‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்டபோது,

அவர்கள்: ‘நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: ‘நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

‘அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)

(அப்போது அவர்கள்) ‘இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்’ என்று கூறினார்கள்.

அவ்வாறாயின், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று கூறினார்.

‘நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).’

‘நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).’

‘அவனே என்னைப் படைத்தான் பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

‘அவனே எனக்கு உணவளிக்கின்றான் அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.’

‘நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

‘மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான் பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.’

‘நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். (அல்-குர்ஆன் 26:69-82)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

‘அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்’ என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ‘(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?) (அல்-குர்ஆன் 31:21)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: ‘இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள் இன்னும் அவர்கள் ‘இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, ‘இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை’ என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (அல்-குர்ஆன் 34:43)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.’

இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்’ என்று கூறாதிருக்கவில்லை.

(அப்பொழுது அத்தூதர்,) ‘உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ‘நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்’ என்று சொல்கிறார்கள்.

ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம் எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக! (அல்-குர்ஆன் 43:22-25)

தற்போது உள்ள உலகத்தில், சாதாரண உலக விஷயங்களை எடுத்துக் கொண்டால், ‘என்னுடைய தந்தை படிக்காதவராக இருந்தார் ஆகையால் அவரைப் போல நானும் படிக்காதவனாக இருக்கப் போகிறேன்’ என்று யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் கடின உழைப்பு செய்து தன்னுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கின்றனர்.

அதே போல தன்னுடைய தந்தை ஏழையாக இருந்தார், ஆகையால் நானும் ஏழையாக இருக்கப் போகிறேன் என்றும் யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் அதிகமதிகம் பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

ஏன் மார்க்க விஷயங்களில் மட்டும் முளையை மழுங்கடித்து குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையர்களை பின்பற்றுகிறேன் என்கிறார்கள்? குர்ஆனின் போதனைகளை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? குர்ஆன் உண்மையின் பக்கம் வழிகாட்டிய போதும், ஏன் குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையரை பின்பற்றுகிறார்?

May 14, 2008

முஸ்லிம்கள் அழைப்புப் பணி செய்ய வேண்டிய அவசியம் ஏன்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக.

சமீபத்தில் தன் வேலை நிமித்தமாக சவூதி அரேபியாவிற்கு வருகை தந்த ஒரு மின்னனு பொறியாளரை, அவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர் என்பதைக் கேள்வியுற்று அவரிடம் பேட்டி கண்டோம். அவர் கூறிய விஷயங்கள் ஒரு முஸ்லிம் பெற்றோர்களுக்குப் பிறந்து வளர்ந்த நம்மை வெட்கப்பட வைத்தது. மேலும் இதைப் படிக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் தம்மைத் தாமே சீர்தூக்கிப் பார்த்து சரி செய்ய இந்த பேட்டி உதவும் என்ற ந்ம்பிக்கையில் நாம் அந்த சகோதரரிடம் கேட்ட பல கேள்விகளில் சிலவற்றை நமது சுவனத்தென்றல் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

கேள்வி:

முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி எங்கு, எப்படி தெரிந்துக் கொண்டீர்கள்?

பதில்:-

நான் பிறந்து வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடிக்கும் வரையில் 18 ஆண்டுகளாக வசித்தது ஒரு இஸ்லாமிய அரபு நாட்டில். ஆனால் அந்த 18 ஆண்டுகளில் இஸ்லாம் என்றால் என்ன? என்று கூட இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவனாக இருந்தேன், என்னுடன் எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் படித்தும் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே என்னிடம் கூறியது கிடையாது.

பின்னர் நான், கல்லூரிப் படிப்புக்காக இந்தியாவிற்குப் சென்றிருந்த போது அங்குள்ள சில முஸ்லிம் மாணவர்கள், என்னிடம் கடவுளுக்கு எப்படி மகன் இருக்க முடியும் என்றும் பைபிளில் காணப்படும் சில தவறுகளையும் சுட்டிக் காட்டினர். பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்த நான் பைபிளை நன்றாகப் படித்திருந்ததன் காரணமாக என்னிடம் கேள்வி கேட்ட முஸ்லிம் மாணவ நண்பர்களிடம் தக்க பதில் கொடுத்து விட்டேன்.

ஆனால் நான் தங்குமிடத்திற்கு வந்ததும், இஸ்லாமிய அடிப்படை அறிவு மட்டுமே உடைய அந்த எளிய மாணவர்கள் கேட்ட கேள்விகள் என்னைக் குடைந்தெடுத்தது. "அந்த முஸ்லிம் மாணவர்களுக்கு நான் கூறிய பதில் சரிதானா" என்று என்னிடமே நான் பல முறைக் கேட்டுக் கொண்டேன்.

நான் இவ்வாறு குழம்பிக் கொண்டிருந்த வேளையில், ஷேக் அஹ்மத் தீதாத் மற்றும் டாக்டர் ஜாகிர் நாயக் போன்ற அறிஞர்களின் உரையைக் கேட்டு விட்டு வந்து அந்த முஸ்லிம் மாணவர்கள் பைபிளைப் பற்றி என்னிடம் மேலும் பல கேள்விகள் கேட்டனர். அப்போதைய சூழ்நிலையில் ஏதேதோ நான் பதிலளித்து விட்ட போதிலும், நான்கு வருடங்கள் படித்து முடித்து விட்டு அந்தக் கல்லுரியை விட்டு வெளி வரும் வேளையில், மிகவும் குழப்பமான மன நிலையில் வெளி வந்தேன்!

பின்னர் மேற்படிப்புக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடொன்றுக்கு சென்றிருந்த போது என் மதத்தைக் குறித்துக் கேள்வி கேட்ட மாணவர்களின் மதமான இஸ்லாத்தைப் பழி வாங்குவதற்காக, அதில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று ஆராயத் துவங்கினேன்.

அதற்காக இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடிய வலை தளங்களைப் பார்வையிட்டேன். அதில் கூறப்படக் கூடிய விமர்சனங்களுக்கு முஸ்லீம்களின் பதிலைத் தேடிய போது அவர்கள் கூறிய விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருந்தது. மேலும் மேலும் அவர்கள் கூறிய தவறுகள் குர்ஆனில் இருக்கிறதா என்று தேடியபோது அதுவும் தவறுகளில்லாமல் இருப்பதைக் கண்டேன்.

உதாரணமாக, கிறிஸ்தவ மிஷனரிகளால் குர்ஆன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஒன்று "வானம்-பூமியைப் படைத்த நாட்களின் எண்ணிக்கையில் குர்ஆனில் முரண்பாடு இருக்கிறது என்று, குர்ஆனில் ஒரு இடத்தில் வானம்-பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகவும் வேறு இடத்தில் 2 நாட்களில் படைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இது முரண்படுகிறது என்பதாக விமர்சிக்கின்றனர்.

ஆனால் இது குறித்து குர்ஆனில் நான் தேடியபோது கிறிஸ்தவர்கள் விமர்சிப்பது ஆதாரமற்றது, குர்ஆனில் அது போன்ற முரண்பாடுகள் இல்லை என்பதை உணர்ந்தேன். மேலும் குர்ஆனைப் படிக்கும் போது நான் இந்தியாவில் கல்லுரியில் படிக்கின்ற போது கிறிஸ்தவ மதத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயங்கள் அனைத்திற்கும் குர்ஆனில் விடை கிடைத்தது. எனவே இஸ்லாம் மார்க்கமே நேரான மார்க்கமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்"

இவ்வாறு அந்த பொறியாளர் பதில் கூறினார்.

நாம் அவரிடம் கேட்ட மற்றொரு கேள்வி: -

முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்து வளர்ந்த முஸ்லிம்களுக்கு தங்களுடைய ஆலோசனை என்ன?

அவருடைய பதில்: -

"நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றியும், உலக முஸ்லிம்ககளின் நிலையைப் பற்றியும் ஒன்றுமே அறியாதிருந்ததைப் போல் எண்ணற்ற கிறிஸ்தவ மற்றும் மாற்றுமத சகோதரர்கள் இருக்கின்றார்கள்.

உதாரணமாக! பாலஸ்தீனத்தை எடுத்துக் கொண்டால் மீடியா என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் நம்பி வந்தேன், பாலஸ்தீனம் பற்றிய உண்மையான நிலைப்பாட்டை முஸ்லிம்களிடமிருந்தோ அல்லது முஸ்லிம் செய்தி ஊடக வழியாகவோ எங்களுக்கு யாரும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லது அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு அமையவில்லை. முழு தவறும் பாலஸ்தீனர்களிடமே உள்ளது என்ற மீடியா குற்றச்சாட்டையே நான் நம்மி வந்தேன். அது போலவே இஸ்லாம் பற்றிய உலக மீடியாக்களின் விமர்சனங்களையும் உண்மை என்று நம்பி வந்தேன்.

எனவே இது போன்ற எண்ணங்களில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற கிறிஸ்தவ மற்றும் மாற்றுமத சகோதரர்களின் சந்தேகங்களை நீக்கி அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், உலக முஸ்லீம்களின் உண்மை நிலைப்பாட்டையும் எடுத்துரைக்க வேண்டியது முஸ்லிமான நம் அனைவர் மீதும் இருக்கின்ற முக்கியமான பொறுப்பாகும்" என்று அந்த பொறியாளர் கூறினார்.

என தருமை சகோதர, சகோதரிகளே! இந்த புதிய இஸ்லாமிய சகோதரரின் பதிலிலே முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றது.

1) நம்மில் பலர் பிறப்பால், நாம் முஸ்லிம்களாக இருக்குறோமேயல்லாது குர்ஆன் என்பது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு அருள்மறை என்பதை அது கூறும் அறிவியல் அற்புதங்களை ஆராய்ந்து அறிவதில்லை.

2) நம்மில் பலர் குர்ஆனை பொருளறியாமல் ஓதுகிறோம், மேலும் நமது குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் கூலிக்கு ஆட்களை அமர்த்தி 7 ஆம் நாள், 40 ஆம் நாள், 6 மாத, 1 வருட பாத்திஹாக்களில் ஓதுவதற்காக குர்ஆனை பயன்படுத்துகிறோமே தவிர அது ஓரு நேர்வழி காட்டும் அருள்மறை என்பதை உணர்வதில்லை.

3) பிறப்பால் முஸ்லிம்களாகிய நம்மிடமே சத்திய இஸ்லாத்தினை போதித்துக் கொண்டுடிருக்கிறோம். மேற்கண்ட பேட்டியில் கூறப்பட்ட சகோதரர்களைப் போல் என்ணற்ற மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவ இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அதன் மகத்துவம் என்ன? உலக மீடியாக்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பரப்பும் எல்லாம் வெறும் பொய்யான செய்திகளே! என்பதைப் பற்றி முஸ்லிம்களாகிய நம்மால் அவர்களுக்கு முறைப்படி எடுத்துச் சொல்லப்படவில்லை என்பதை நாம் உணர்வதில்லை. .

4, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பொருளுனர்ந்து படித்து மாற்று மத சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும், பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கின்ற வகையில் நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.

5, இவை அனைத்தையும் விட தஃவா பணி என்பது முஸ்லிமான நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பு ஆகும்.

எனவே சகோதர, சகோதரிகளே, முதலில் நம்மை, நாமே சீர் படுத்திக் கொண்டு அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாத முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரர்களுக்கும் நம்மால் முடிந்த அளவிற்கு நம் வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மன வலிமையையும் முஸ்லிமான நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.

புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்!

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.

புறம் பேசுதல் என்றால் என்ன?

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-

அல்லாஹ் கூறுகிறான்:-

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)

ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-

“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-

1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.

2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.

3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.

4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.

புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -

கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -

‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.

மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -

1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -

“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.

2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -

“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.

புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -

ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:-

39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)

“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)

எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -

“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.

“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)

அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.

உறவினர்களைப் பேணி வாழ்வதன் அவசியம்!

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்-குர்ஆன் 25:54)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். எந்த அளவுக்கென்றால், ஒருவர் தன் உறவினர்களோடு உள்ள உறவைத் துண்டித்தால், அல்லாஹ்வும் அந்த நபருடன் உள்ள இரக்கம் காட்டுதல், கருனை என்னும் உறவை துண்டித்து விடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது. (அல்-குர்ஆன் 13:25)

இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள். (அல்-குர்ஆன் 2:27)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: -

தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) மற்றும்
அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:5985 & 5986)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) “உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்’ என்று கூறினான்” என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:5988)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் ‘சற்று பொறு’ என்றான். ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்றது உறவு. ‘இது உனக்காக நடக்கும்’ என்றான் அல்லாஹ்.
(இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக் குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள். ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:7502)

எனதருமை சகோதர சகோதரிகளே! உறவைத் துண்டித்து வாழ்வதன் தீமைகளைப் பற்றி இந்த அளவுக்கு கடுமையாக அல்-குர்ஆனும் ஹதீஸ்களும் எச்சரிக்கின்றது. ஆனால் நம்மில் சிலர் சர்வசாதாரணமாக ஆயுளுக்கும் உன் உறவே வேண்டாம் என இரத்த பந்த உறவுகளைக் கூட துண்டித்து வாழ்வதைக் காண்கிறோம்.

இஸ்லாம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது என்றால், ‘ஒருவர் மற்றொருவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பேசுவாராயின் அல்லது தம் உறவை துண்டித்து வாழ முயற்சிப்பராயின் உண்மையான முஃமினான அவர் அவ்வாறு பேசுபவரிடம் கனிவான சொற்களைக் கூறி, அவருடைய தவறுகளை மன்னித்து, மறைத்து, அவருக்கு மரியாதை தந்து, அவரிடம் நல்லமுறையில் நடந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் தவறாக நடக்க முற்பட்டவர் நாண முற்றவராக தன்னைத் தானே திருத்திக் கொள்வார். இது இஸ்லாம் காட்டும் அழகிய வழி முறையாகும். மேலும் இது அல்லாஹ்விடம் வெகுமதிகளைப் பெற்றுத் தரும் நற்குணமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

41:33 எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: ‘நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?’ (இருக்கின்றார்?)

41:34 நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

41:35 பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.

41:36 உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். (அல்-குர்ஆன் 41:33-36)

24:22 இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (ஹதீஸ் எண்- 6138)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று”
என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் புகாரி (ஹதீஸ் எண்-6076)

எனவே நாம் நம் உறவினர்களைப் பேணி வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக, நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.

அல்-குர்ஆனின் மொழி பெயர்ப்பை சதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதா?

குர்ஆன் தன்னுடைய வார்த்தை என்றும், மனித குல சமுதாயம் அனைத்துக்கும் வழிகாட்டுவதற்காக அருளினேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் குர்ஆன் புரிந்து கொள்வதற்கு எளிதானது என்றும் குர்ஆன் சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும்,வெளிப்படையாகவும், சொல்கிறது என்றும் கூறுகிறான்.

மேலும் குர்ஆனில் திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லை. மனிதகுல சமுதாயம் அனைத்துக்கும் மிகச்சரியான நேர்வழி காட்டியாக உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் மனிதர்களில் சிலர், குர்ஆனின் போதனைகள், வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றனர்.

அல்லாஹ் உண்மையை மட்டுமே பேசக் கூடியவன், மனிதனின் நினைப்புகள் எல்லாம் தவறானவைகள். அல்லாஹ்வின் வார்த்தை, மனிதனின் வார்த்தை இரண்டில் நாம் எதையாவது தேர்வு செய்ய நாடினால், அல்லாஹ்வின் வார்த்தையை மட்டும் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:-

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)

ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)

(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டு விடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 6:70)

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 15:9)

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:89)

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். (அல்-குர்ஆன் 19:97)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)

18:1 தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.

18:2 அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்-குர்ஆன் 18:1-2)

2:99 (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:99)

குர்ஆனில் போதனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று புனித குர்ஆனில் ஒரு வசனத்தில் கூட அல்லாஹ் சொல்லவில்லை, இதற்கு மாறாக,குர்ஆனை புரிந்து கொள்வதற்கு, சாதாரண அறிவு போதும் என்று அல்லாஹ் குர்ஆனில் அவ்வப்போது கூறுகிறான்.

குர்ஆனில் போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை புரிந்து கொள்வதற்கு, மனிதர்கள் யாரும் விஞ்ஞானிகளாக மாற தேவையில்லை குர்ஆனின் போதனைகள் யாவும், சாதாரண அறிவு படைத்த மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் புனித குர்ஆனை திறந்து அதை புரிந்து கொள்ளும் படியாக படிக்க வேண்டும்.

சில கொள்கையற்ற தலைவர்களும், தங்களுக்கு தாங்களே மகான்களாக ஆக்கிக்கொண்டவர்களும், மக்களை, புனித குர்ஆனின் போதனைகளை புரிந்து கொள்வதில் இருந்து தடுக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய உடை அணிந்து குர்ஆனை விட்டும் வழி கெடுக்கின்றனர். குர்ஆன் புரிந்து கொள்ள முடியாது என்றும், சாதாரண மக்களுக்கு புரிவது இல்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்ள நாடினால் அது உங்களை வழிகெடுத்து விடும் என்று திரும்பத் திரும்ப மக்களை எச்சரிக்கின்றார்கள்.மேலும் குர்ஆனின் ஒவ்வெரு வசனங்களும் பல அர்த்தங்களை கொண்டுள்ளது என்றும் ஒரு சில சாமானியர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என்றும், ஆகையால் குர்ஆனை புரிந்து கொள்ள வேண்டும் எனில் இவர்களையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் குர்ஆனின் தெளிவான கட்டளைகளை மறைத்து, அதன் மூலம் உங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சுருட்டிக்கொண்டு உங்களை குர்ஆனின் பக்கம் வழிகாட்டுவதற்கு பதிலாக தங்களின் பக்கம் வணங்குவதற்கு கொண்டு வருகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்¢ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 2:174)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான் மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்-குர்ஆன் 2:159)

யா அல்லாஹ்! முஸ்லிமான எங்களுக்கு குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி அதன் தெளிவான தகவல்களை புரிந்து கொள்வதற்கு உதவி செய்வாயாக!

யா அல்லாஹ்! கொள்கையற்ற தலைவர்களையும், தங்களுக்குத் தாங்களே மகான்களாக ஆக்கிக்கொண்டவர்களையும் அடையாளம் கண்டு கொள்வதற்கு எங்களுக்கு அறிவையும் வீரத்தையும் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! அவர்களின் உள் நோக்கங்களை புரிந்து கொள்வதற்கும் அருள் புரிவாயாக!

யா அல்லாஹ்! எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!

யா அல்லாஹ்! குர்ஆனை படித்து அதன் எளிமையான வசனங்களை புரிந்து கொள்வதற்கு அருள்புரிவாயாக!

யா அல்லாஹ்! எங்களை நேரான வழியில் செலுத்துவதுடன், குர்ஆனிலிருந்து எங்களுடைய அறிவை அதிகப்படுத்துவாயாக!

இணைவைக்கும் குடும்பத்தார்களை, தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு?

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது, அவனது சாந்தியும் சமாதானமும் அவனுடைய திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள், மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.

இன்று நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் திரும்பி இருக்கிறோம் என்றால் அது நம்முடைய அறிவாற்றலினாலோ அல்லது நமது திறமையினாலோ அன்று; மாறாக அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் தன் அடியார்களாகிய நம்மீது கொண்டுள்ள, மிகப் பெரும் கருணையினால் அவனுடைய சத்திய மார்க்கத்தின் வழி காட்டியாக விளங்கும் அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் நம்மைத் திருப்பி இருக்கிறான். இதற்காக அவனுடைய அடியார்களாகிய நாம் அவன் நமக்கு புரிந்த பேருபகாரத்திற்காக எவ்வளவு தான் நன்றி செலுத்தினாலும் அது போதுமானதாக இருக்காது.

அல்லாஹ்வின்,அளப்பெரும்,கருணையும்,நேர்வழியும் நமக்கு இருந்திருக்காவிட்டால், நவூதுபில்லாஹ் மின்ஹா! அவனால் என்றுமே மன்னிக்கபடாத ஷிர்க் என்னும் மாபாதக செயலாகிய இணைவைத்தல் என்றும் மிகக் கொடிய பாவத்தில் இன்றளவும் நாமும் உழன்று கொண்டிருப்போம். எனவே நாம் நம்மீது கருணை கொண்ட வல்ல ரஹ்மானை, கருணையாளனை எக்கணமும் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உண்டாவதாக!

அல்லாஹ் கூறுகிறான்:-

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.

(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம். (அல்-குர்ஆன் 6:125-126)

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசித்திருக்கின்ற ஒவ்வொரு முஃமின் மீதும் அவனுடைய சத்திய மார்க்கத்தை தம் குடும்பத்தார்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு இன்னும் சமுதாயத்தில் உள்ள பிறருக்கும் எடுத்துக் கூறுவதை கடமையாக்கியுள்ளான். ஆனால் யாருக்கு நேர்வழி காட்டவேண்டும் என்பது முற்று முழுதாக அல்லாஹ்வின் விருப்பத்தைப் பொருத்தது.

அல்லாஹ் கூறுகிறான்:-

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்¢ அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்¢ அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்¢ தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 6:66)

எனவே முஃமினான ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தம்மையும் தம் குடும்பத்தார்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும். அதற்காக நம் குடும்பத்தார்களை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையிலான தூய இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது, அவர்களை அல்லாஹ் கட்டளையிட்ட ஏவல் விலக்கல்களை பேணி நடக்குமாறு ஏவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.

நாம் முதலில் நமது நெருங்கிய குடும்பத்தார்களை அல்-குர்ஆனின் பக்கம் திருப்ப முயற்சிக்க வேண்டும். அவர்களிடம் கண்ணியமான முறையில் எடுத்துக் கூறி அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படிக்கச் செய்திட முயற்சிக்க வேண்டும். கருணையாளனான அல்லாஹ் நாடினால் அதன் மூலம் அவர்கள் மிககொடிய ஷிர்க் எனும் இணைவைத்தலிருந்து விடுபட்டு படைத்த இறைவனை மட்டும் வழிபடும் உன்மையான முஸ்லிம்களாக மாறக்கூடும்.

முக்கியமான, விஷயம் ஒன்றை இங்கே நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். நாம் நமது குடும்பத்தார்களிடம் இஸ்லாத்தைப் போதிக்கும் போது மிகவும் அறிவுக் கூர்மையுடன், நிதானமாகவும் மிகவும் பொறுமையுடனும் செயல்படவேண்டும். மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நாம் தூய இஸ்லாத்தை அறிந்துணர்ந்து ஏற்றுக்கொண்டு விட்டதால் நமது குடும்பத்தார்களும், அவர்கள் பிறந்தது முதல் செய்து வருகின்ற சமாதி வழிபாடு, பித்அத் போன்ற அனைத்து வழிகேடுகளையும் உடனடியாக விட்டு விடவேண்டும் என்று அவசரப்படக் கூடாது. நிதானமின்மையின் காரணத்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், குடும்பத்தில் பிரிவுகள் போன்றவைகள் நிகழ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தேவையற்ற நீண்ட வாக்குவாதங்களையும், விவாதங்களையும் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும்.

சந்தர்ப்ப, சூழ்நிலைகளை அனுசரித்து யாரிடம் பேசப்போகின்றோமோ அவருடைய மனநிலையை அறிந்து மிகவும் நளினமாகவும், விவேகத்துடனும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அவர்கள் செய்கின்ற ஷிர்க், பித்அத் போன்றவற்றைக் கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டக் கூடிய அறிவுப்பூர்வமான தர்க்கரீதியில் (logic) எடுத்துரைக்க வேண்டும்.

பின்னர் தூய இஸ்லாம் என்பது அல்-குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு செய்வதையே அல்-குர்ஆனும் நமக்கு போதிக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்:-

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)

நமது குடும்பத்தார்கள் தாம் செய்கின்ற தவறை உணர்ந்து சத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்கு சில நிமிடங்ள் ஆகலாம், அல்லது சில நாட்கள் ஆகலாம் அல்லது சில மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். ஏன் சில சமயங்களில் அவர்கள் சத்திய இஸ்லாத்தை கடைசி வரையிலும் ஏற்றுக் கொள்ளாமலேயே மரணிக்கலாம்.

அல்லாஹ் முஸ்லிம்கள் மீது கடமையாக பிறருக்கு எடுத்துசொல்வதை மட்டும் தான் ஆக்கியிருக்கிறான். ஒருவரை நேர்வழி படுத்துவதோ அல்லது வழிகேட்டில் விட்டுவிடுவதோ நம்முடைய பொறுப்பன்று. அது அல்லாஹ்வின் விருப்பத்தை பொறுத்தது.

இஸ்லாத்தில் சேருமாறு யாரையும் நிர்ப்பந்தப் படுத்தக்கூடாது: -

அல்லாஹ் ஒவ்வொருக்கும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும், இறைவனை அடைவதற்குரிய பாதையை தேர்ந்தெடுக்கும் சுய விருப்பத்தையும் கொடுத்திருக்கிறான். எனவே அல்லாஹ் நாடினால் அவர் சுயமாக சிந்தித்து சத்திய இஸ்லாத்தை தமது இறைவனை அடையும் வழியாக தேர்ந்தெடுப்பார்.

ஆகையால் நாம் நம்முடைய விருப்பங்களை, நம்பிக்கைகளை ஒருவர் மீது திணித்து, அதை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தக் கூடாது. அவர்கள் எவ்வளவு தான் நமக்கு நெருக்கமானவர்களாகவோ, அல்லது அன்பு, பாசத்திற்குரியவர்களாகவோ இருந்தாலும் சரியே! ஏன்னென்றால் அவர்களை நேர்வழி படுத்தும் ஆற்றல், சக்தி நம்மிடம் இல்லை. நமது பொறுப்பு நம்மால் முடிந்த அளவு அவர்களிடம் எடுத்துக் கூறுவது தான்.

அல்லாஹ் கூறுகிறான்:-

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான். (அல்-குர்ஆன் 28:56)

பெற்றோர்கள் இணைவைப்பவர்களாக இருந்தால்…?

பெற்றோர்கள் இணை வைப்பவர்களாக இருந்தால் கூட அவர்களிடம் நாம் கண்ணியமான முறையில் தான் இஸ்லாத்தை எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் நாம் சொல்வதை கேட்கவில்லையே என்று அவர்கள் மீது கோபப்படவோ அல்லது அவர்களை ஒதுக்கி வைக்கவோ நிச்சயமாக கூடாது. தவ்ஹீதை போதிக்கிறோம் என்ற பெயரில் நம்முடைய இளைய சகோதரர்களில் பலர் பெற்றோர்களை கண்ணியமற்ற முறையிலும் அவமரியாதை செய்கின்ற வகையிலும் நடத்துகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்: -

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள்.

‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார். (ஆதாரம்: புகாரி)

எனவே சகோதர, சகோதரிகளே,நாம் செய்யவேண்டியவை என்னவெனில்,பொறுமையாகவும், நளினமாகவும் நம்முடைய ஆயூட்காலம் முழுவதும் சத்தியத்தை எடுத்துக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் நம் குடும்பத்தார்களுக்காக, அவர்களுடைய நேர்வழிக்காக அல்லாஹ்விடம் மன்றாடி துஆச் செய்ய வேண்டும். (இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாடினால் அவர்களுக்கும் நேர்வழியை காட்டுவான். அவர்கள் சத்தியத்தை ஏற்கவில்லையெனில், குறைந்தபட்சம் நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு நமது தஃவா எனும் அழைப்புபணி என்ற கடமையைச் செய்தவராகி விடுவோம்.

அல்லாஹ் நம்மிடம் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினாய் என்று கேட்கப் போவதில்லை. மாறாக நாம் அழைப்புப் பணி செய்தோமா இல்லையா என்று தான் கேட்பான்!
எனவே என தருமை சகோதர சகோதரிகளே, சத்தியத்தை எடுத்து சொல்லும் சிறந்த பணியில் என்றும் நாம் சளைக்காது பொறுமையுடன் நமது ஆயுட்காலம் வரைக்கும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாகவும்.

அல்லாஹ் அதற்குறிய ஆற்றலை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!(ஆமீன்).

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே!

அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கவில்லை என்றே அறியமுடிகின்றது. மறைவான விஷயங்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததெல்லாம் அல்லாஹ்வினால் வஹிமூலம் அவர்களுக்கு அருளப்பட்டதே தவிர வேறில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)

(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்-குர்ஆன் 11:123)

(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 27:65)

மேற்கண்ட திருமறையின் தெள்ளத் தெளிவான வசனங்களின் அடிப்படையில் மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அவன் வஹி மூலம் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறென்றும் தெரியாது என்பது தெளிவாகின்றது.

அல்லாஹ் கூறுகிறான்:-

(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல்-குர்ஆன் 3:44)

(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (அல்-குர்ஆன் 11:49)

72:21 கூறுவீராக: ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.’

72:22 கூறுவீராக: ‘நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

72:23 ‘அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும்.

72:24 அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

72:25 (நபியே!) நீர் கூறும்: ‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.

72:26 ‘(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். (அல்-குர்ஆன் 72:21-26)

எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு எதிராக ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கும் அனைத்து மறைவான விஷயங்களும் தெரியும் என்று கூறுவாரானால் அது அடிப்படையற்ற பொய்யான வார்த்தைகளாகும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதை உணரவேண்டும்.

மனைவிக்கு கனவன் செய்ய வேண்டிய கடமைகள்! - Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
வாராந்திர பயான் நிகழ்ச்சி
இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா
நாள் : 07-05-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

உண்மையே உள்ளத்தின் அமைதி - Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
ரியாளுஸ் ஸாலிஹீன் விளக்கங்கள்
இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா
நாள் : 02-05-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

May 9, 2008

அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா?

சிறப்புரை: மெளலவி இஸ்மாயில் ஸலஃபி

ஆசிரியர் : ‘உண்மை உதயம் மாத இதழ்’

இடம் : அல்-கப்ஜி தஃவா மற்றும் வழிகாட்டல் மையம்

நாள் : 29-04-2008

Link : Audio/Video

இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மதமா?

சிறப்புரை: மெளலவி இஸ்மாயில் ஸலஃபி

ஆசிரியர் : ‘உண்மை உதயம் மாத இதழ்’

இடம் : அல்-கப்ஜி தஃவா மற்றும் வழிகாட்டல் மையம்

நாள் : 29-04-2008

Link : Audio/Video

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?- Audio/Video

உரை:மெளலவி இஸ்மாயில் ஸலஃபி

சிறப்புரை: மெளலவி இஸ்மாயில் ஸலஃபி

ஆசிரியர் : ‘உண்மை உதயம் மாத இதழ்’

இடம் : அல்-கப்ஜி தஃவா மற்றும் வழிகாட்டல் மையம்

நாள் : 29-04-2008

Link : Audio/Video

May 8, 2008

பொய் பேசுவதன் தீமைகள்!

எழுதியவர் : நிர்வாகி

அணைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.

பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.

1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!


அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: -
அல்லாஹ் கூறுகிறான்: -

“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)

ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: -


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று1) பேசினால் பொய் பேசுவான்,2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

2) பொய்யின் வகைகள்: -

அ) அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது: -


இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.


அல்லாஹ் கூறுகிறான்: -

‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -

“என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.

ஆ) வியாபாரத்தில் பொய் கூறுவது: -


"மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனதுபொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம்.

“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின்வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)

இ) கணவுகளில் பொய் கூறுவது: -


தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -


“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது. ஆதாரம்,புகாரி:-7042

ஈ) கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: -


நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.

இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டேன் என்று கூறுகிறார்கள்.

நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உ) நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: -


யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: -

“நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.

அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்: -

‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர். அப்போது நபி(ஸல்)அவர்கள் நீங்கள் எதைகண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள் அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுருத்துவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத், அஹ்மத்)

அப்துல்லா இப்னு அல் சயீப் இப்னு யஜீத், தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-

“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத் மற்றும் திர்மிதி.

ஊ) குழந்தைகளிடம் பொய் சொல்வது: -


இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: - “யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு

எ) மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: -


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

3) பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: -


உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.

அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: -


எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.

அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)

ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.

ஆ) பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்: -


இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

இ) பொய் பேசுபவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: -


இப்னு அல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -

(ஒருவருடைய) சாட்சியங்ககளும்,பத்வாக்களும்,குறிப்புகளும், நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் பொய் பேசுவதாகும் ஏனென்றால், இந்த பொய் அவருடைய சாட்சியத்தையும், பத்வாக்களையும் மற்றும் குறிப்புகளையும் மாசுபடுத்துகிறது. இது ஒரு குருடன் நான் பிறையைப் பார்தேன் என்று சாட்சியம் கூறுவதைப் போன்றது. அல்லது ஒரு செவிடன் ஒருவர் நடந்து சென்ற ஒசையைக் கேட்டேன், என்று சாட்சியம் கூறுவது போன்றதாகும். பொய் பேசும் நாக்கானது வேலையே செய்யாத உறுப்பைப் போன்றது. உண்மையில் அது அதைவிட மோசமானது, ஒருவனிடம் இருக்கும் மிகமிக மோசமான ஒரு பொருள் எது வென்றால் அது பொய் பேசும் அவனுடைய நாக்கு ஆகும். ஆதாரம்:(அலாம் அல்-முவக்கியீன் 1/95)

ஈ) பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: -


அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)

உ) பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்: -


சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்: -

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: -

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.

….

நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.



தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

ஊ) பொய் பேசினால் உண்மையான ஈமான் (நம்பிக்கை) ஏற்படாது: -


உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.

4) அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -


1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்


1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: -

மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
1, ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது 2, யுத்தத்தின் போது 3, மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

தொடர்புடைய ஆக்கங்கள்:

உண்மையாளர்களுக்குரிய உயர் அந்தஸ்த்து! - பகுதி 2 Audio/Video

பெற்றோரின் மகிமை - ஓர் உண்மைச் சம்பவம்! - Audio/Video