Jun 30, 2008

இஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.

பளபளக்கும் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று தெருவில் கிடக்கிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்க்கவேயில்லை. ஆனால் ஒருவர் மடடும் அதை பார்த்துவிட்டு அவருடைய கை அந்த நோட்டுக் கற்றை எடுக்கிறது. அதை எடுக்கும் போதே அந்தக் கையின் விரல்களில் அணிந்திருக்கும் ‘அதிருஷடக் கல் மோதிரம்’ ஃபோகஸ் செய்யப்படுகிறது. நீங்களும் அதிருஷ்ட சாலியாக வேண்டுமா? என இப்படி பலவித விளம்பரங்கள் இன்று நம்மை நோக்கி வருகின்றன.

வாழ்வில் பிரச்சனையா?

செல்வம் சேர்க்க வேண்டுமா?

ஆண்மை சக்தி குறைவா?

மண வாழ்வில் பிரச்சனையா?

வெளி நாடு செல்ல வேண்டுமா?

“இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிருஷ்டக் கல் மோதிரம் அணியுங்கள்” என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தங்கள் சரக்குகளை விற்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் மோசடிகள் பல செய்து ஏழை எளியவர்களின் உழைப்பில் தங்களின் வயிறுகளைக் கழுவி வருகின்றனர்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கற்கள் உண்டு அதை அணிந்து கொண்டால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் நம்புவது வடிகட்டிய முட்டாள் தனமும் மூட நம்பிக்கையும் ஆகும். வேதனையான விஷயம் என்னவென்றால் தாம் மெத்தப் படித்தவர் என்றும், டாக்டர் என்றும் பொறியாளர் என்றும் சொல்லிக்கொள்பவர்கள் கூட தங்களின் அறிவை அடகு வைத்துவிட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து இந்த மூடநம்பிக்கையின் பால் ஆட்கொண்டு விடுகின்றனர்.

ஆனால் சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலே இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி இவ்வாறு நம்பிக்கை கொள்வதே மிகப் பெரும் பாவமாகும். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனறியாமல் ஓர் ஆணுவும் அசையாது என்பதாகும். மேலும் இந்த வகையான கற்களுக்கும் மோதிரங்களுக்கும் எந்த சக்தியுமில்லை என்பதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

‘(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:17)

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல்-குர்ஆன் 35:2)

எனதருமை முஃமினான சகோதர, சகோதரிகளே! இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் சகல காரியங்களும் இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. இதில் எந்த ஒரு முஃமினுக்கும் சந்தேகம் இல்லை. இதில் சந்தேகம் வரவும் கூடாது. அவனுடைய நாட்டமில்லாமல் அணுவும் அசையாது என்றிருக்க அவனை மட்டுமே வணங்கி முற்றிலும் அவனையே சார்ந்திருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நாம் எப்படி அவனை விடுத்து அவனுடைய படைப்பான கற்களிடமும், சட்சத்திரங்களிடமும், கிரகங்களிடமும் நம்பிக்கை கொள்வது?

முன்சென்ற சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பலர் இவ்வாறு கற்களுக்கும், சிலைகளுக்கும் நட்சத்திரங்களுக்கும், சூரியனுக்கும் சக்தியுண்டு என்று நம்பி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வழிபட்டதால் தானே அவர்களை ‘காஃபிர்கள்’ என்று இறைவன் கூறினான்?

“தன் மீது அசுத்தம் படிந்தால் தானே சுத்தம் செய்து கொள்ள சக்தியில்லாத, தமக்குத் தாமே எதுவுமே செய்து கொள்ள இயலாத கற்களை”, ‘உங்களின் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்யப் போகின்ற அதிருஷ்டக் கற்கள்” என்று கூறி நவீன காலத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் டி.வி. போன்ற மீடியாக்களின் உதவியுடன் விற்பனை செய்து வருகின்றனர். துரதிருஷ்ட வசமாக படிப்பறிவில்லா பாமரர்களும் மெத்தப் படித்த மேதாவிகளும்? இந்தப் போலியான கவர்ச்சி விளம்பரங்களில் ஏமாந்து விடுகின்றனர்.

ஒருவர் இந்த அதிருஷ்டக்கல் என்பதை அணிந்துக் கொண்டால் அவைகள் அவருக்கு நலவுகளைத் தருகின்றது என்று நம்பிக்கை கொள்வாராயின் அது படுபயங்கரமான, இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத ‘ஷிர்க்’ என்று சொல்லப்படக் கூடிய மாபெரும் பாவமாகும். காரணம் என்னவெனில், அந்த அதிருஷ்டக் கல் மோதிரம் அணிந்து கொள்பவர் பின்வரும் மாபெரும் குற்றங்களைச் செய்தவர் போலாகிறார்.

1) மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் சக்தியையும் மீறி இந்த அதிருஷ்டக் கற்களே தமக்கு நன்மை தீமைகளை அளிக்கின்றது என்று நம்புகிறார்.

2) அல்லது அந்த அதிருஷடக் கற்களை அணிந்து கொண்டதன் காரணத்தால் அல்லாஹ் வேறு வழியில்லாமல் அவருக்கு நன்மைகளையே தருகின்றான் என்று நம்புகிறார். (நவூதுபில்லாஹ்! இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்)

ஒருவர் இதை மறுத்தாலும் இது தான் உண்மையாகும். மேற்கண்ட இரண்டில் ஒரு காரணத்திற்காகத் தான் ஒருவர் இவ்வகையான கற்களுடைய மோதிரங்களை அணிகிறாரே தவிர வேறில்லை. எனவே இது ‘ஷிர்க்’ எனப்படும் மாபெரும் பாவமாகும்.

எனென்றால் இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுடைய படைப்பாகும். படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில் அவனையே சார்ந்திருக்கின்றன. அவைகள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளக் கூட சக்தியற்றவைகளாக இருக்கின்றன.

அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடிவிட்டால் அதை தடுத்து நிறுத்த வேறு யாராலும் முடியாது. அதைப் போல அல்லாஹ் ஒருவருக்கு ஒரு தீமையை நாடிவிட்டால் அதை அவனைத்தவிர வேறு எதுவும் அதாவது அதிருஷ்டக் கற்களோ, தட்டு, தகடு, தாயத்து அல்லது இது போன்ற எதற்குமே சக்தியில்லை. இவைகளை அணிந்து கொண்டாலும் இவைகளால் அவனுடைய சக்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய இயலாது.

அல்லாஹ் கூறுகிறான்: -

அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:107)

மாறாக, இவைகளை அணிந்து கொண்டால் இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் கேட்பதற்கு பதிலாக இந்த கற்கள், தட்டு, தகடு மற்றும் தாயத்து போன்றவைகளின் மீது நம்பிக்கை வைத்ததற்காக இறைவனின் கோபத்திற்குள்ளாக நேரிடும். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாகவும்).

மேலும் ஒருவருடைய பிறந்த தேதிக்கும் நட்சத்திரத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. நட்சத்திரங்கள் ஒருவருடைய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று நம்புவதும் மூட நம்பிக்கையும் இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையும் மாபெரும் பாவமுமான ‘ ஷிர்க்’ என்னும் இணைவைத்தலுமாகும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொண்ட முஃமினான ஒருவர் இத்தகைய நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

அல்லாஹ் கூறுகிறான்: -

39:65 அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்).

39:66 ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்-குர்ஆன் 39:65-66)

எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்-குர்ஆன் 5:72)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன் 4:48)

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். (அல்-குர்ஆன் 10:106)

எனவே எனதருமை முஃமினான சகோதர சகோதரிகளே! யார் அல்லாஹ்வுடைய வேதத்தையும் அவனுடைய தூதருடைய வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொண்டு வாழ்கிறாரோ அவர் வழிதவற மாட்டார். ஆனால் எவர் வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் தூரமான வழிகேட்டில் இருக்கிறார்.

அல்லாஹ் கூறுகிறான்:

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்-குர்ஆன் 3:160)

ருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன?-Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 11-06-2008

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

Jun 25, 2008

தொழுகையின் போது பிறர் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடுமா?-Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 11-06-2008

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்!

தவ்ஹீதின் அடிப்படை தேவைகளை முழுமைப்படுத்துவதற்கு, படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துதல், இறைவனின் பண்புகள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றில் இறைவனை ஒருமைப்படுத்துதல் ஆகிய இரண்டை மட்டும் உறுதியாக நம்பினால் போதாது.

தவ்ஹீத் முழுமை அடைவதற்கு மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதோடு வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதலையும் உறுதியாக நம்பவேண்டும். இவற்றிற்கு ஆதாரமாக, அல்லாஹ் தான் திருமறையில் மிகத் தெளிவாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைநிராகரிப்பாளர்கள் மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதை மட்டும் நம்பினார்கள் என்று கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக. (அல்-குர்ஆன் 10:31)

மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? (அல்-குர்ஆன் 43:87)

இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?’ என்று நீர் கேட்பீராகில்: ‘அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். (அதற்கு நீர்) ‘அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவீராக. எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (அல்-குர்ஆன் 29:63)

மக்கத்து வாசிகள் அல்லாஹ் தான் படைத்தவன், பாதுகாப்பவன் மற்றும் தங்களுடைய கடவுள் என்று அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அல்லாஹ்வை பொறுத்தவரையில் முஸ்லிம் என்று சொல்வதற்கு இந்த அறிவு மட்டும் போதாது.

அல்லாஹ் கூறுகிறான்: -

மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (அல்-குர்ஆன் 12:106)

முஜாஹித் (இப்னு அப்பாஸின் மிகச்சிறந்த மாணவர்) அவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளிக்கையில், அல்லாஹ் தான் தங்களை படைத்தவன், உணவளிப்பவன் மற்றும் தங்களின் உயிர்களை வாங்குபவன் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ்வோடு மற்ற கடவுள்களை வணங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகையால் மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆட்சியையும் சக்தியையும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குத் தேவைகள் அல்லது துன்பங்கள் வரும் போதெல்லாம் தங்களுடைய பலவிதமான வணக்க வழிபாடுகளான ஹஜ், தான தர்மங்கள் நேர்ச்சைகள் மற்றும் அறுத்துப் பலியிடுதல் ஆகியவற்றை மற்ற கடவுள்களுக்கு அர்ப்பணித்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை இப்றாஹீம் நபியின் வழித் தோன்றல்கள் என்றும் கூறிக் கொண்டனர். இவர்களின் இந்த கூற்றுக்காக அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான்.

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. (அல்-குர்ஆன் 3:67)

சில மக்கத்து காஃபிர்கள் ‘மறுமை நாளையும்’ ‘தீர்ப்பு உண்டென்றும்’ வேறு சிலர் ‘களா கத்ரை’யும் நம்பினர். முந்தைய இஸ்லாமிய கவிதைகளில் இவற்றிற்கு அதிகமான சான்றுகள் காணப்படுகின்றது. உதாரணமாக ஜுஹைர் என்ற கவிஞர் ‘அது தாமதப்படுத்தப்பட்டுள்ளது’ அல்லது ‘மறுமை நாளுக்காக பாதுகாக்கப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார் .

அந்நாரா என்ற கவிஞர் ‘ஓ எபிலே மரணத்தை விட்டு எங்கே தப்பித்து ஓடுகிறாய்? என் இறைவன் அதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டான்’ என்று கூறியுள்ளார்.

மக்கத்து காஃபிர்கள் தவ்ஹீதையும் இறைவனையும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவர்கள் இறைவனை விட்டு விட்டு மற்ற கடவுள்களை வழிபட்ட காரணத்தால் இறைவன் அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று விவரிக்கிறான் .

ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவெனில் இறைவனை வணங்குவதில் ஒருமையை கட்டிக் காத்தலாகும். வணங்குவதற்கு அவன் ஒருவனே தகுதியுடையவன் ஆதலாலும் அவன் ஒருவனே நமக்கு நன்மை அளிக்கக்கூடியவன் ஆகையாலும் அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனை முன்னிறுத்தியே செய்ய வேண்டும். மேலும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே எந்தவித இடைத்தரகரும் தேவையில்லை. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் மேலும் நபிமார்கள் எடுத்துச் சென்ற செய்தியின் முக்கியத்துவம் அனைத்துமே வணக்கவழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்தப்பட வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்-குர்ஆன் 51:56)

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (அல்-குர்ஆன் 16:36)

படைக்கப்பட்டதன் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்வது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். மனிதன் என்பவன் குறிப்பிட்ட வரையறைக்குள் படைக்கப்பட்டவன். ஆகையால் நிகரில்லா படைத்தவனின் செயல்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியாதவனாக உள்ளான். ஆகையால் இறைவன் அவனை வணங்குவதை மனிதனின் ஒரு பகுதியாக ஆக்கினான். மேலும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்குவதற்காக நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பினான். இவற்றின் நோக்கமெல்லாம் முன்பே விளக்கியதுபோல வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்த வேண்டும் என்பது தான். இதற்கு மாறு செய்பவர்கள் மிகப் பெரும்பாவமான இறைவனுக்கு இணை கற்பிக்கிறார்கள். சூரா பாதிஹாவில் இறைவன் கூறுவது போல ஒவ்வொரு முஸ்லிமும் (தொழுகையில்) குறைந்தது 17 முறை கூறுகிறான்: -

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்-குர்ஆன் 1:5)

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகளில் ஒருமை தத்துவத்தை உறுதி செய்கிறார்கள். தொழுகையில் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடுங்கள் (திர்மிதி)

இறைவன் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறான். ஆகையால் எந்தஒரு இடைதரகரும் தேவையில்லை உதாரணாமாக: -

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 2:186)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்பது அனைத்து வகையான இறைவனுக்கு இணை வைத்தலையும் நிராகரிக்கிறது. யாராவது ஒருவர் இறந்தவர்களிடம் பிரார்த்தித்து உதவி தெடினால் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். ஏனெனில் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய படைபினங்களுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“பிராத்தனையும் வணக்கமாகும்” (அபூதாவூத்)

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: -

‘(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்’ என்று கேட்டார். (அல்-குர்ஆன் 21:66)

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்-குர்ஆன் 7:194)

யாராவது ஒருவர், நபிமார்களிடமோ, மதகுருமார்களிடமோ, ஜின்களிடமோ அல்லது மலக்குகளிடமோ உதவி கேட்டால் அல்லது அல்லாஹ்விடம் எங்களுக்காக உதவி கேட்குமாறு பிராத்தனை அல்லது வேண்டுதல் அல்லது முறையிடுதல் செய்தாலோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். அறியாதவர்களாய் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு ஆபத்தில் இருப்பவற்களுக்கு அபயம் அளிப்பவர் என்று அளிக்கப்பட்ட பட்டம் கூட இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய செயலாகும்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் “வணக்கங்கள்” என்பது நோன்பு, ஜகாத், ஹஜ் மற்றும் குர்பானி கொடுத்தல் போன்றவற்றை விட அதிகமானதாகும். ்வணக்கம்் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடான அன்பு, நம்பிக்கை மற்றும் பேரச்சம், பயம் ஆகியவையும் உள்ளடங்கும். அல்லாஹ் இவைகளைப் பற்றி விளக்கி இவை அதிகமானால் வரக்கூடிய பாதிப்புகளையும் பற்றி எச்சரித்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள். இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள். அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). (அல்-குர்ஆன் 2:165)

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர். நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (அல்-குர்ஆன் 9:13)

(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) ‘அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்’ என்று கூறினர். (அல்-குர்ஆன் 5:23)

வணக்க வழிபாடுகள் என்பது தன்னை முழுவதுமாக கீழ்படிவதாலும் மேலும் அல்லாஹ் என்பவன் சட்டதிட்டங்களை முழுமையாக கொடுக்கக்கூடியவன் என்பதாலும் ஷரீஅத் அடிப்படையிலான சட்டங்கள் இல்லாமல் மற்ற சட்டதிட்டங்களை அமலாக்குவது ஒருவகையான இறை நிராகரிப்பாகும். மேலும் இது போன்ற சட்டங்களை நம்புவது அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடுவது போன்றதாகும்.

நிச்சயமாக நாம் தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம் அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள். இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள் முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல்-குர்ஆன் 5:44)

ஒரு முறை நபித்தோழர் அதீபின் ஹாதிம் (ரலி) (கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின் வரும் வசனத்தை ஓத கேட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்-குர்ஆன் 9:31)

இந்த வசனத்தை ஓதக்கேட்ட அந்த நபித்தோழர் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பக்கம் திரும்பி “அல்லாஹ் அவர்களுக்கு ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கவில்லையா?” என்று கூறிய போது “ஆம்” (என்று அந்த நபித்தோழர்) என்று கூறினார்கள். அப்போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இவ்வாறு தான் அவர்களை வணங்கினார்கள்” என்று கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி.

ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைபடுத்துவதில் முக்கியமான ஒன்று ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்துவதாகும். முக்கியமாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இறக்குமதி செய்யப்பட்டு கம்யூனிஸ மற்றும் முதலாலித்துவ கொள்கைகளின் அடிப்டையில் அரசாங்கம் செய்கின்ற, தன்னை “முஸ்லிம் நாடுகள்” என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இறைவனின் சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முன்வரவேண்டும். இந்த நாடுகளில் இஸ்லாமிய சட்டம் என்பது காலாவதியான அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் புத்தகத்திலும் மதச்சார்பற்ற சட்டங்கள் அமலிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் வாழ்க்கையின் அனைத்து வகையிலும் பொருத்தமான இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வரவேண்டும். அல்லாஹ் அதற்கு பேரருள் புரிவானாகவும்.

ஆங்கில மூலம் : www.allaahuakbar.in

Jun 22, 2008

தொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை? - Audio/Video

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)

நாள் : 11-06-2008

நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

தொழுகை குறித்த சந்தேகங்களும் தெளிவுகளும்!- Audio/Video

உரை : மெளலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி

நாள் : 11-06-2008

இடம் : அல்-கப்ஜி

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

Jun 19, 2008

சாட் ரூம் (chat room) வழியாக ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!

நான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துறையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.

சிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.

நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, பெரியவர்கள் சொல்வதை, செய்வதை எல்லாம் எவ்வித தவறும் இல்லாமல் சரியானதவைகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். இப்போது கூட அப்படித் தான் நினைக்கத் தோன்றும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவேகமாக ‘ஒரு கடவுள் தான் இருக்கிறார்’ என்று தீர்மானித்து தனிப்பட்ட முறையில் நம்பி வந்தேன். அதற்கு முன்னர் தவறானவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக வருத்தப்பட்டேன். கிறிஸ்தமத கோட்பாடுகளுக்கு மாற்றாமான நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இருக்க வெட்கப்பட்டு அதிலிருந்து விடுபட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்து வந்தேன்.

நான் சிறுமியாக இருந்தபோது “இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”. பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என்னுடைய ஆரம்ப பள்ளியில் இரண்டு முஸ்லிம் சிறுவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்மிக்கையை அவர்களுக்குள் வைத்திருந்தனர். அவர்களில் சிறியவர் அலி, கூட்டாக (ஜமாத்தாக) தொழுவதை மறுத்து வந்தார்.

நான் எப்போதும் கடவுளிடம் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொள்வேன். உதவிக்காக எப்போதும் கடவுளையே வேண்டினேன். நான் 11-12 வயதிருக்கும் போதே இறைவன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பினேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நான் வைத்திருந்த ஒரு கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை என்று உணர ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் நான் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் “இஸ்லாம் என்பது ஒரு கொடுமையான மதம்” என்றும் “அது பெண்களை துச்சமாக மதிக்கிறது” என்பது மட்டும் தான். மேலும் எங்களுக்கு பள்ளிக்கூடங்களிலே “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது” என்று பள்ளிக் கூடத்திலே கற்றுக் பயிற்றுவிக்ககப்பட்டது தான்.

மேலும் “இஸ்லாத்தில் பெண்கள் என்பவர்கள், ஆடைகள் மூலம் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு போகப் பொருள்” என்றும், “முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்குகிறார்கள்” என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் ஏதாவது ஒரு முஸ்லிம் பெண்மணி (எங்கள் ஊரில் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்) அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, நான் எனக்குள் ‘நீங்களாகவே எப்படி இதைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொள்வேன். உண்மையில் அந்த அளவிற்கு முஸ்லிம்களின் மேல் அதிக ஆத்திரமும் வெறுப்பும் எனக்கு ஏற்பட்டது.

அதனால் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் நான் மிகவும் வெறுப்படைந்தேன். ஆனால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் இது இதற்கு முன்பு நான் அறியாமல் இருந்த ஒன்றாகும்.

நான் யூத, ஹிந்து மற்றும் புத்த மதங்களைப்பற்றி ஆராய்ந்தேன். ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனால் கற்பனை செய்யப்பட்டு மற்றும் முரண்பாடுகளோடு கூடிய மதங்களாக எனக்கு தோன்றின. ஒரு நாள், எது என்னை துண்டியது என்று தெரியவில்லை, மதங்களைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்க என் மனம் நாடியது. மேலும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது போல உண்மையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை தான் நம்புகிறார்களா? என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன். ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது. அந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது? என்ற ஊசலாட்டங்கள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன். இஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.

நான் முஸ்லிமாக ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆயினும் அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு கிடைத்த எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திரு குர்ஆனை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். நடுத்தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்ததால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இது என்னை தடுத்து நிறுத்தவில்லை. இது மொழி பெயர்ப்பு என்று அறிந்திருந்தேன். ஆயினும் அதிலிருந்து படித்தவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தது. இஸ்லாம் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு மார்க்கம் என்பதையும் அதிலிருந்து திரும்புதல் என்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நான் உண்மையில் எதையும் தீர்மானிப்பதற்கு முன் மிகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இரண்டரை வருட படிப்பின் முடிவில் 1997 ஜனவரியில் சாட் ரூம் (chat room) என்பது என் வாழ்க்கையை மாற்றியது. இஸ்லாமிய இனைய தளத்தின் விவாத மேடையில் (chat room) மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்கள். இரண்டாவது தடவை அங்கே சென்ற போது உலக மக்கள் எல்லோர் முன்னிலையில் நான் “வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராவார்கள்” என்ற சாட்சியைச் சொல்லி முஸ்லிமாக மாறினேன்.

ஆங்கில மூலம் : www.islamreligion.com

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் - பெண்னுரிமை பகுதி - 3

பெண்களின் மாதவிடாய் குறித்து பைபிள்: -

மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஏழு நாள் தன் விலக்கத்தில் இருக்க வேண்டும். அவளைத் தொடுகிறவனும் சாயங்காலம் வரைக்கும் தீட்டுப்பட்டிருக்க வேண்டும். அவள் எதில் படுத்திருக்கிறாளோ அல்லது எதின் மீது உட்கார்ந்திருக்கிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையை, அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தண்ணீரில் தோய்த்து, தண்ணீரில் முழுகி சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

என்ற கருத்தில் பைபிளின் பழைய ஏற்பாடு, லேவியராகமம் அதிகாரம்: 15, வசனம்: 19-23 ல் கூறப்பட்டிருக்கிறது.

மாதவிடாய் குறித்து இஸ்லாம்: -

அலி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டு வியர்வையின் காரணமாக அவர்களின் ஆடைகள் அவர்களோடு ஒட்டிக் கொண்டாலோ அல்லது மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண்ணின் உடம்பில் அவனுடைய ஆடை ஒட்டிக் கொண்டாலோ அந்த ஆடைகள் “அசுத்தமானதாகக்” கருதப்படுமா என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் , “இல்லை! அசுத்தம் என்பது விந்தும் , (மாதவிடாயின்) இரத்தமும் மட்டும்தான்” என்று பதிலளித்தார்கள்.

சிறிய விளக்கம்!

இறைவன் பெண்களுக்கு குழந்தைப்பேறுக்காக நியமித்துள்ள மாதவிடாய் என்பதை பைபிள் அனுகும் விதத்தையும் இஸ்லாம் மார்க்கம் அனுகும் விதத்தையும் அறிந்து இயற்கையோடு ஒத்துப்பாகிற மார்க்கம் எது? என சிந்திக்க கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டுள்ளார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் ஏழு நாட்களுக்கு தீட்டு பட்டிருப்பாள் என்பதோடல்லாமல் அவள் படுத்திருக்கும் அல்லது உட்கார்ந்திருக்கும் அனைத்தும் தீட்டு பட்டிருக்கும் அவைகளைத் தொடுகிறவனுக்கும் அந்த தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்று பைபிள் கூறுகிறது. தாங்களே செயல்படுத்தாத, நடைமுறைக்கு ஒத்துவராத இவைகள் இறைவனால் அருளப்பட்டவைதானா? அல்லது இவைகள் பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? என கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சிந்திக்க வேண்டும்.

ஆனால் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் அனுப்பிய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனை என்ன வென்றால்,

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணோ அல்லது அவள் தொடுகின்ற எதுவுமே தீட்டுகிடையாது, மாதவிடாயின் இரத்தம் மட்டுமே தீட்டாகும் எனக் கூறுகின்றார்கள்.

அகில உலக மனிதர்களுக்கெல்லாம் நேர்வழி வழிகாட்டுவதற்காக சத்தியம் எது? அசத்தியம் எது? என்று பிரித்தறிவதற்காக இறைவன் அருளிய அவனுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்: -

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்-குர்ஆன் 38:29)

Jun 17, 2008

தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்” என்ற திருமறையின் வசனங்கள் எது? அல்-குர்ஆன் (9: 34 & 35).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“தங்கம், மற்றும் வெள்ளியின் உரிமைகளை (ஜகாத்தை) நிறைவேற்றாதவனுக்கு மறுமை நாளில், அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட பாளங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் அவனது முகத்திலும், விலாப்புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். அந்நெருப்புப் பாளங்கள் குளிர்ந்து விடும் போதெல்லாம் மீண்டும் சூடேற்றப்படும். (மறுமையின்) அந்நாள்(இம்மையின்) ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம், நஸாயி.

யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.”

இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (ஆதாரம்: புகாரி)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆம்விட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

அல்லாஹ் நம்மனைவரையும் ஜகாத்தை முறைப்படி கொடுத்து வரக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

தொழுகையில் வரிசைகளை நேர் செய்தல் - ‘ஷைத்தானை விரட்டுதல்’

தொழுகையில் வரிசைகளை நிலை நாட்டுவதும் அதை நேராக்குவதும் பற்றி ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் நமக்கு விளக்குகின்றன. மேலும் அவ்வாறு செய்வது முஸ்லிம்களின் இதயங்கள் ஒன்று படுவதற்கும், ஷைத்தானை விரட்டுவதற்கும் முக்கியமானதாக அமைகிறது. இது போன்ற ஹதீஸ்கள் மக்களுக்கு தெரியாமல் இல்லை. இருந்த போதிலும் அவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அலட்சியமாக உள்ளனர். ஆகையால் இவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஹதீஸகளை விளக்க வேண்டியது மிக அவசியமானதாக இருக்கிறது.

நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

“நபி (ஸல்) அவர்கள் மக்களின் பக்கம் திரும்பி நின்று உங்களுடைய வரிசையை நேராக்குங்கள் (மூன்று முறை கூறினார்கள்) அல்லாஹ் உங்களுடைய தரங்களை ஒன்றாக்குவான். இல்லையெனில் அல்லாஹ் உங்களுடைய இதயங்களில் வேற்றுமைகளை போட்டுவிடுவான்” என்று கூறினார்கள்.

மேலும் அவர் கூறினார் ‘நான் என்னுடைய தோழர்கள் ஒருவர் மற்றவருடைய தோழோடு தோள் சேர்த்து, முழங்காலோடு முழங்கால் சேர்த்து, கணுக்காலோடு கணுக்கால் சேர்த்து நின்றதைப் பார்த்தேன்’ (ஆதாரம் : அபூதாவுத், இப்னு ஹிப்பான், அஹ்மத்)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ ஒருவர் மற்றவரோடு நெருக்கமாக நில்லுங்கள். இடைவெளியை நிரப்பி தோளோடு தோள் சேர்த்து நில்லுங்கள். ஏனெனில் யார் கையில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆனையாக, நிச்சயமாக ஷைத்தான் வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் ஏவுகனைகளைப் போல வருவதை நான் பார்க்கிறேன்’ (ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத்)

இந்த இரண்டு ஹதீஸ்களின் மூலம், ஷைத்தான் வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் நுழைந்து அவர்களுக்கிடையே குரோதத்ததை உண்டாக்கி அவர்களைப் பிரிக்கிறான் என்று காண முடிகிறது. எனவே தான் வரிசையில் நேராக நின்று இடைவெளியை நிரப்புவதன் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணர்த்தி அதை பின்பற்றுவதற்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

தொழுகையில் நேராக நிற்பது ஷைத்தானை பலவீனப்படுத்தோடல்லாமல் தொழுகையாளர்க்கு இடையே குழப்பத்தை உண்டாக்க நினைக்கின்ற அவனுடைய எதிர்பார்ப்பு முறியடிக்கப்படுகின்றது.

ஆகையால் தொழுகையாளிகளே! நபி (ஸ்ல்) அவர்களின் வழிமுறைப்படி நடந்து அதனைப் பின்பற்றி மக்களையும் அதன்பால் அழைப்போம். அதன் மூலம் மக்கள் ஒன்று திரண்டு ஷைத்தானின் வலையில் இருந்து பாதுகாவல் பெறுவோம். இல்லையெனில் அல்லாஹ் உங்களுடைய இதயத்தில் வேறுபாடுகளை உண்டாக்கிவிடுவான்.

எழுத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக வாசிப்பது போல, கணுக்காலோடு கணுக்கால் சேராமல், தோளோடு தோள் சேராமல் வரிசையை நேராக்க முடியாது. முதலில் இருந்து முடிவு வரை உடலோடு உள்ளமும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய மார்க்கத்திற்காவும் இணவோம்.

ஆங்கில மூலம் : www.allaahuakbar.in

நற்பண்புகளைப் பேணுவதன் அவசியம்!- Audio/Video

உரை : மெளலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி

நாள் : 06-06-2008

இடம் : அல்-கப்ஜி

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

தபர்ருஜ் என்றால் என்ன?

‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.

தபர்ருஜ் என்றால் என்ன?

‘பெண்கள் தங்களின் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவருக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ (திருமணம் செய்ய ஆகுமான உறவினர்கள் மற்றும் பிறர்) வெளிக்காட்டுவதும், பொது இடங்களில் மேக்கப்புடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும், அந்நிய ஆண்களின் இச்சையைத் தூண்டும் வேறு எந்த விதமான காரியங்களைச் செய்வது தபர்ருஜ் ஆகும்’

தபர்ருஜ் செய்வதனால் விளையும் தீமைகள்:-

இமாம் அத்தாபி அவர்கள் தங்களின் ‘அல் கபாயிர்’ (பெரும் பாவங்கள்) என்ற நூலில் கூறுகிறார்கள்: ‘பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற விஷயங்களில் மறைத்துள்ள தங்களுடைய அலங்காரத்தை வெளிக்காட்டுவதும், வெளியே செல்லும்போது வாசனை திரவியங்கள் உபயோகிப்பதும், வண்ணமயமான அல்லது சிறிய வெளிப்புற ஆடை அணிவதும் அடங்கும். தபர்ருஜ் என்பது இது அனைத்தையும் உள்ளடக்குகின்றது. மேன்மைக்குரிய அல்லாஹ் தபர்ருஜையும் அதைச் செய்யும் பெண்களையும் வெறுக்கிறான்’

தபர்ருஜ் மோசமானது:-

அல்லாஹ்வின் தூதரவர்கள் தபர்ருஜை ஷிர்க், விபச்சாரம், திருட்டு போன்ற மற்ற மோசமான செயல்களுடன் சமமாக்கி சொல்கின்ற அளவுக்கு தபர்ருஜ் மோசமானது.

பர்தா அணிவதன் நோக்கம்:-

ஒரு பெண் பர்தா அணிவதன் நோக்கம், தன்னுடைய உடல் பாகங்களையும், தன்னுடைய அழகு அலங்காரங்களையும் மறைப்பது தான். ஆனால் அந்த பர்தாவே வண்ணமயமானதாகவும், கண்ணைக் கவரக்கூடியதாகும் இருப்பின், அதை அணிவதின் நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது.

பர்தா அணியும் முறை:-

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘பர்தாவானது அதற்குக் கீழுள்ள ஆடைகளை மறைத்திட வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்மணி தொழும்போது உபயோகிக்கும் உடையும் இவ்வாறே இருக்க வேண்டும். மெல்லிய, உள்ளே உள்ளவைகளை காண்பிக்கக்கூடிய உடைகள் ஆண்களை கிளர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மெல்லிய உடையை அணியும் பெண்கள் உடை அணிந்தும் அணியாதவர்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

உடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:-

இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

நாணம் விலகின் ஈமானும் விலகிவிடும்:-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நாணமும் ஈமானும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததாகும். ஒன்றை விட்டு ஒன்று விலகி விடுமெனில் மற்றொன்றும் அத்துடன் விலகிவிடும்’ ஆதாரம்: ஹாக்கிம்.

பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு பெண்கள் செல்லக்கூடாது:-

பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை ஒரு பெண் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு அப்பால் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை தடுக்கும் பல நபிமொழிகள் உள்ளன.

காணிக்கை தொழுகை!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டாலும் அல்லது ஆரம்பிக்காவிட்டாலும் இது பொருந்தும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“நீங்கள் பள்ளிவாசலில் நுழையும் போதெல்லாம் இரண்டு ரக்அத் தொழுவதற்கு முன் உட்காராதீர்கள்” ஆதாரம் : முஅத்தா.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, ஒரு மனிதர் பள்ளிவாசலில் வந்(து அமர்ந்)தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீ தொழுதாயா? என்று வினவிய போது போது அந்த மனிதர் ‘இல்லை’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் “எழுந்து இரண்டு ரக்அத் தொழுது கொள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஆதாரம் : புகாரி.

இன்று நமது வழக்கத்தில் காண்கிறோம், சிலர் பள்ளிவாசலுக்குள் வந்தவுடன் அது ஜூம்மா தொழுகைக்கான நேரமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற கடமையான தொழுகைக்கான நேரங்களாக இருந்தாலும் சரி, உடனே அமர்ந்து விடுவதைப் பார்க்கின்றோம். இத்தகைய சகோதரர்கள் மேற்கண்ட நபி (ஸல்) கட்டளையைக் கருத்தில் கொண்டு அதன்படி செயல்பட கடமைப்பட்டுள்ளார்கள்.

ஒருவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கட்டளைகளையும் உபதேசங்களையும் பின் பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் வழிகேட்டின் பக்கம் செல்லமாட்டார். எவர் ஒருவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட்டு மற்றவர்களின் போதனைகளை பின் பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் வழிகேட்டின் பக்கம் சென்றவராவார்.

யா அல்லாஹ் நீயே சிறந்த வழிகாட்டுபவன்; மேலும் அனைவருக்கும் வழிகாட்டுபவன் நீயே! எனவே யா அல்லாஹ் எங்களுக்கும் நேர்வழியைக் காட்டுவாயாக!

Jun 10, 2008

சிந்திக்கத் தூண்டும் வேதம் எது?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

சில நாட்களுக்கு முன்பு நான் கிறிஸ்தவ சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய பொறியியல் வல்லுனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் ” பைபிளில் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்துக்களும் மற்றும் பல முரண்பாடுகளும், தவறுகளும் காணப்படுகின்றனவே! நீங்கள் கிறிஸ்தவராக இருந்த சமயத்தில் இதைக் குறித்து உங்களுக்கு சந்தேகமே எழுந்ததில்லையா? மேலும் உங்கள் மத குருமார்களிடமோ அல்லது பைபிளின் அறிஞர்களிடமோ இவைகளைப் பற்றி கேள்வி கேட்டதுண்டா? என்று வினவினேன்.

அதற்கு அந்த சகோதரர் “கிறிஸ்தவ மதத்தில் பைபிளைக் குறித்து கேள்வி கேட்கப்படுவதை வரவேற்பதில்லை. ஏனென்றால் பைபிளை குறித்து கேள்வி கேட்பது சாத்தானின் செயல் என்று கூறுவார்கள். மேலும் பைபிளில் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் கடவுளின் வார்த்தைகள் என்றும் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்றும் கூறுவார்கள். அதனால் நாங்கள் பைபிளைப் பற்றி ஒன்றுமே கேள்வி கேட்க மாட்டோம். அதை அப்படியே நம்பி வந்தோம்.” என்று கூறினார் .

என தருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! நாம் சற்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். நாம் ஒரு நூலை “இறைவனின் வார்த்தைகள்” எனக் கூறுவதாக இருந்தால் அவைகள் குறைந்த பட்சம்

1) தவறுகள் அற்றவைகளாகவும்
2) முரண்பாடுகள் அற்றதாகவும்
3) எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவும்
4) நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு எதிரானதாக இல்லாமலும்
5) குறிப்பாக அதைப் படிப்பவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழ இடமில்லாமல் இது இறைவனிட மிருந்து வந்த திருவேதம் என்ற நினைப்பை தோற்றுவிக்கிறதாகவும் இருக்க வேண்டும்.

ஒருவர் பைபிளைப் படித்து விட்டு அதில் எழக் கூடிய சந்தேகங்களை யாரிடம் கூறி தெளிவு பெறுவர் ? பைபிளைக் கற்ற அறிஞர்களிடம் மட்டுமே! ஆனால் அந்த அறிஞர்களோ பைபிளைக் குறித்து எழும் சந்தேகங்கள் சாத்தான் புறாத்திலிருந்து வருவது என்று கூறி பயமுறுத்தினால் அவர் எங்கே சென்று தெளிவு பெறுவார்? அவ்வாறு பயமுறுத்துவது மூலம் கேள்விகளைத் தவிர்ப்பது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்பதற்காகத் தான்.

ஆனால் சத்திய மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய அறிஞர்களால் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்ச்சிகளின் இறுதியில் கேள்வி-பதில் என்ற நிகழ்ச்சியும் இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.

இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில்,

- உரையாற்றிய தலைப்பில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும்
- இஸ்லாமிய சட்ட திட்டங்கள் குறித்து எழும் சந்தேகங்கள் குறித்தும்
- இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால் இஸ்லாம் மீது வாரியிறைக்கப்படும் அவதூறுகள் குறித்தும்
- மாற்று மத சகோதர சகோதரிகளுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இஸ்லாத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற சவாலுடன் கேள்வி கேட்க அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு வேதங்களைப் பற்றி எழக்கூடிய ஐயங்களைக் குறித்து கேள்வி கேட்டு தெளிவு பெற இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் அவனுடைய படைப்பினமான மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அருளிய சத்திய திருமறையில், அனைத்து மனிதர்களையும் நேக்கி இந்தக் குர்ஆனைக் குறித்து சித்தனை செய்யுமாறும் ஆராய்சி செய்யுமாறும் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

இறைவன் கூறுகிறான்: -

4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

38:29 (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.

முன்னாள் கிறிஸ்தவ மத போதகராகவும் தற்போதைய இஸ்லாமிய மார்க்க போதகராகவும் திகழ்கின்ற அறிஞர் அஷ்ஷெய்க் யூசுஃப் எஸ்டஸ் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் தாம் ஏன் இஸ்லாத்தை தேர்தெடுத்தேன் என்று பேசுகையில் அவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது.

அவர் கிறிஸ்தவராக இருந்த போது ஒரு முஸ்லிமானவரை கிறிஸ்தவராக்க முயற்சித்திருக்கிறார். அப்போது அந்த முஸ்லிமான நபர் ‘நீங்கள் இஸ்லாத்தை விட கிறிஸ்தவம் சிறந்தது என்று நிருபித்தால் நான் கிறிஸ்தவத்தை ஏற்க தயாராக இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார். அதைக்கேட்டு மகிழ்ந்த யூசுஃப் அவர்கள், அந்த முஸ்லிமான நபரிடம், நீங்கள் கிறிஸ்தவத்தை தழுவினால் உங்கள் மார்க்த்தில் செய்வது போன்று நோன்பு நோற்க தேவையில்லை, ஜகாத் கொடுக்க தேவையில்லை மற்றும் ஹஜ் செய்யத் தேவையில்லை என்பது போன்றவற்றைக் கூறி கிறிஸ்தவ மார்க்கம் எளிமையானது என கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த முஸ்லிமான சகோதரரோ எனக்கு எளிமையான மார்க்கம் தேவையில்லை. நான் உங்களிடம் கேட்டது கிறிஸ்தவ மார்க்கம் இஸ்லாத்தை விடச் சிறந்தது என்பதற்கான ஆதாரம் (proof) தான் என கூறியிருக்கிறார்.

உடனே அவர் “பைபிள் என்பது கடவுளின் வார்த்தைகள். இதற்கு ஆதாரம் எல்லாம் கேட்கக் கூடாது. அப்படியே நம்பிக்கைக் கொள்ள வேண்டும்” என சொன்னதாக கூறி, இவ்வாறு தான் தாமும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறினார்.

ஆனால் இஸ்லாம் இறைவனின் திருமறையின் வசனங்களைப் பற்றி சிந்தித்து நல்லுணர்வு பெறுமாறு பல்வேறு இடங்களில் கூறுகிறது.

இறைவன் கூறுகிறான்: -

6:126 (நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.

15:75 நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

16:44 தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

39:27 இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

14:52 இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.

எனவே கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே இறைவன் சிந்திக்க தூண்டுகின்ற வேதத்தைப் படித்து அவன் நமக்கு வழங்கியிருக்கும் அறிவைக் கொண்டு சிந்தித்து அதன் படி செயலாற்ற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

உங்களின் சிந்தனையில் ஏற்படுகின்ற ஐயங்களுக்கு விடைகான எங்களால் முடிந்த வரை உதவ காத்திருக்கிறோம்.

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 37:155)

நபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்!

‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த முன்று விஷயங்களாவன:

1) முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
2) எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
3) எவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார் என்று கூறினால் அவா பொய்யுரைத்துவிடடார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

இந்த ஹதீஸிலிருந்து நாம் முத்தான மூன்று விஷயங்களைத் தெரிந்துக் கொள்கிறோம்.

முதலாவது, நம்மவர்களில் சிலர் நினைத்துக் கொணடிருப்பதைப் போல் முஹம்மது (ஸல்) அவர்களோ அல்லது வலிமார்கள் என்று சொல்லப்படக் கூடிய இறைநேசர்களோ அல்லது அபூஹனீபா (ரஹ்) போன்ற இமாம்களோ இறைவனைப் பார்த்ததில்லை. அவ்வாறு பார்த்ததாக சொல்லப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதால் அச்செய்திகள் எல்லாம் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.

மேலும் இதை திருமறையின் பின்வரும் வசனங்கள் உறுதி படுத்துகிறது.

“பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்-குர்ஆன் 6:103)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்’ என்று கூறினார். (அல்-குர்ஆன் 7:143)

மேற்கண்ட இறைவசனங்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

இரணடாவது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளங்கிக் கொள்ள வேணடும். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. இதை அல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களைத் தமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்று கூறுமாறு திருமறையில் கடடளையிடடுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)

(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)

மூன்றாவதாக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த செய்திகளில் எதையாவது ஒன்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார்கள் அல்லது அவர்கள் மறந்து விடடார்கள் என்று எவரேனும் கூறினால் அவர் பொய்யராவார்.

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை அடைவதற்குரிய? சில ஞான? இரகசியயங்களை சாதாரன மக்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டு அலி (ரலி) அவர்களுக்கு மடடும் சொல்லி விடடுச் சென்றதாகவும் அந்த இரகசியங்கள் பரம்பரையாக தங்களுக்கு மடடும் வந்துக் கொணடிருப்பதாகவும் ஸுஃபிகள் என்று சொல்லப்படக்கூடிய சில போலிகள் கூறிக்கொண்டு சாதாரண பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பில் தங்கள் வயிறுகளை வளர்த்து வருகிறார்கள்.

எனவே எராளமான ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்கள் மூலம், தாங்கள் இறைவனைப் பார்த்ததாகவும், தங்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும் என சொல்லிக் கொணடுத் திரியும் ஸுஃபிகள், பீர்கள், செய்குமார்கள், ஞானிகள், குத்புமார்கள் அனைவரும் பொய்யர்களே என்பதை விளங்கிக் முடியும்.

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

Jun 8, 2008

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - பிரிட்டனின் முன்னாள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு! - (Tamil text+English Video)

ஒரு முன்னால் பிரிட்டன் கத்தோலிக்க மதகுரு, குர்ஆனை படித்து விட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார்!

“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர் ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர் ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:82-83)

பிரிட்டனின் முன்னால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு )தன்னுடைய மாணவர்களுக்கு புனித குர்ஆனின் மேற்கூறிய வசனத்தை ஓதிக்காட்டியபோது நடந்ததும் இது தான். மேலும் இதுதான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் தன்னுடைய பயணத்தின் முக்கியமான படிகல்லாகவும் அமைந்தது.

இவர் கெய்ரோவில் உள்ள பிரிட்ஷ் கவுன்சிலில் சமீபத்தில் உரையாற்றிய போது, தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் வாடிகனில் பணியாற்றிய 5 வருட காலத்தின் போது கிறிஸ்தவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் செய்ததைப் பற்றித் தாம் கலைப்படவில்லை என்றார்.

கிறிஸ்தவ மதகுருவாக இருந்து ஒருசில வருடங்கள் மக்களுக்கு சேவை செய்ததை நான் மகிழ்ந்தேன். இருந்த போதிலும் உள் மனதில் சந்தோஷமில்லாமலும் ஏதோ சரியாக இல்லாததையும் உணர்ந்தேன். இறைவனின் அருளால், அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகள் மற்றும் தற்செயலாக நடந்த சில செயல்களால் நான் இஸ்லாத்துக்கு வர நேர்ந்தது.

தவ்ஃபீக்கின் வாழ்க்கையில் நடந்த மற்றொரு தற்செயலான நிகழ்ச்சி என்னவெனில் எகிப்துக்குச் சென்று வந்த பிறகு வாடிகனில் தன்னுடைய வேலையை இராஜினாமா செய்ய அவர் எடுத்த முடிவாகும்.

எகிப்து என்றாலே பிரமிட், ஒட்டகங்ள், மணல் வெளிகள் மற்றும் பனை மரங்கள் தான் என் நினைவுக்கு வந்தது. ஆகையால் விமானத்தில் Hurghada என்ற ஊருக்குப் பறந்தேன். ஆனால் அது ஐரோப்பாவின் கடற்கரையைப் போல இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முதல் பேருந்தைப் பிடித்து கெய்ரோவிக்குச் சென்று, என் வாழ்க்கையின் உன்னதமான ஒரு வாரத்தை செலவு செய்தேன்.

இதுதான் என்னுடைய முதல் இஸ்லாம் மற்றும் முஸ்லிமைப் பற்றிய அறிமுகமாக இருந்தது . எகிப்தியர் மிகவும் மென்மையான, இனிமையான அதே சயத்தில் மிகவும் வலிமையான மனிதர்களாக இருந்ததை கனித்தேன்.

மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிப்பது போலவும் அதை நம்பிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் நினைப்பது போலவும் ்முஸ்லிம்கள்் என்றாலே அவர்கள் தற்கொலை படையினராகவும், போராளிகளாகவும் தான் இருப்பார்கள் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் எகிப்துக்கு சென்ற பிறகு இஸ்லாம் எவ்வளவு அழகான மார்க்கம் என்று கண்டு கொண்டேன். வீதியிலே பொருளை விற்பவர்கள், தொழுகைக்காக அழைப்பைக் கேட்டவுடன், தன்னுடைய வியாபாரத்தை விட்டு விட்டு பள்ளிவாசலுக்கு விரைந்து செல்வதை பார்க்க முடிகிறது. இறைவன் இருக்கிறான் என்பதையும் அவன் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள் .

அவர்கள் தொழுது, நேன்பு வைத்து, மறுமையில் சொர்க்கத்தில் வாழ்வதற்காக தன் வாழ்நாளில் மக்காவுக்கு ஒரு முறைசெல்வதற்கு கணவு காண்கிறார்கள் என்றும் விவரித்தார். நான் எகிப்தில் இருந்து திரும்பியதும், மதங்களைக் கற்பிக்கும் என் வேலையை தொடர்ந்தேன். பிரிட்டனின் கல்வித் திட்டத்தில் மார்க்கம் சம்பந்தமான படிப்பு ஒன்று தான் கட்டாய பாடமாக இருக்கிறது. நான் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் புத்த மதங்களைப் பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு நாளும் மதங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக இந்த மதங்களைப் பற்றிப் படிக்க வேண்டியதாக இருந்தது. மாணவர்களில் பெரும்பாலோர் அரேபிய முஸ்லிம் அகதிகளாக இருந்தனர். சரியாக சொல்ல வேண்டும் எனில் இஸ்லாத்தைப் பற்றி கற்றுக் கொடுப்பது எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது .

பிரச்சனைகளை உண்டு பண்ணக் கூடிய மற்ற பருவ வயதினரைப் போல் அல்லாமல், ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த மாணவர்கள் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்தார்கள். அவர்கள் அன்பாகவும் அமைதியாகவும் இருந்தார்கள். எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வளர்ந்த போது, நோன்பு வைக்கக் கூடிய ரமலான் மாதத்தில், அந்த மாணவர்கள் என்னுடைய வகுப்பறையில் தொழுது கொள்ளலாமா என்று என்று என்னிடம் கேட்டார்கள்.

அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வகுப்பறை ஒன்றுதான் தரை விரிப்புடன் கூடியதாக இருந்தது. ஆகையால் அவர்கள் தொழும்போது நான் பின்னால் இருந்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். நான் ஒரு முஸ்லிமாக இல்லாதபோதும், அவர்களுடன் நானும் நோன்பு வைத்து அவர்களை ரமலான் மாதத்தில் நோன்பு வைக்குமாறு ஆர்வ முரட்டினேன்.

ஒரு முறை வகுப்பறையில் திருக்குர்ஆனின் வசனங்களைப் படித்த போது இந்த வசனத்தை அடைந்தேன்.

“இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:83)

நான் ஆச்சரியப்படும் அளவிற்கு என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை மாணவர்களிடமிருந்து மறைப்பதற்கு முயற்சி செய்தேன்.

மிகப் பெரும் நிகழ்ச்சி: -

செப்டம்பர் 11- 2001 அன்று நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப் பிறகு தான் என் வாழ்க்கையின் திருப்பு முனை அமைந்தது.

அடுத்த நாள், பாதுகாப்பாக நான் கீழ்தளத்தில் இருந்தேன். மேலும் மக்கள் எவ்வளவு பயந்தவர்களாக உள்ளனர் என்பதையும் கனித்தேன். இது போன்ற ஒரு நிகழ்வு பிரிட்டனிலும் நடக்கலாம் என்று நானும் பயந்தேன். அந்த சமயத்தில், மேற்கத்தியர்கள் தங்களால் பயங்கரவாத மார்க்கம் என்று குற்றம் சுமத்தப்படுகின்ற இஸ்லாத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தனர்.

இருந்த போதிலும், முஸ்லிம்களிடத்தில் எனக்குள்ள முந்தய அனுபவம் என்னை வேறெரு கோணத்தில் அனுகச் செய்தது. கிறிஸ்தவர்கள் இது போன்ற செயலை செய்கின்ற போது, பயங்கரவாத கிறிஸ்தவ மதம் என்று குற்றம் சுமத்தாதவர்கள், முஸ்லிம்களாக இருக்கின்ற ஒரு சிலர் செய்கின்ற தீவிரவாத செயல்களின் போது மட்டும் ஏன் தீவிரவாதத்தை இஸ்லாமிய மதத்தோடு சேர்த்து இஸ்லாத்தை குற்றம் சுமத்துகிறார்கள்? ஏன் இஸ்லாம் (மட்டும் குறி வைக்கப்படுகின்றது)? என்று ஆச்சரியப்படத் துவங்கினேன்.

ஒரு நாள் இஸ்லாம் மதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக, லண்டனில் உள்ள மிகப் பெரும் பள்ளி வாசலை நேக்கிச் சென்றேன். அங்கே முன்னால் பாப் பாடகர் யூசுப் இஸ்லாம் வட்டமாக உட்கார்ந்து கொண்டு சிலரிடையே இஸ்லாத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு அவரிடம், நீங்கள் முஸ்லீமாக மாறுவதற்கு என்ன செய்தீர்கள்? என்று வினவினேன்.

“ஒரு முஸ்லீம் ஒரே இறைவனை வணங்கவேண்டும், 5 நேரம் தொழ வேண்டும், ரமலான் மாதத்தில் நேன்பு வைக்க வேண்டும்” என்று பதிலளித்தார். நான் அவரை இடைமறித்து, நான் எல்லாவற்றையும் நம்பினேன், ரமலான் மாதத்தில் நேன்பும் வைத்தேன் என்றேன். பிறகு எதற்காக காத்துக் கொண்டிருக்கிறாய்? என்று அவர் என்னிடம் கேட்டார். நான் மதம் மாறுவதற்கு நினைக்கவில்லை என்றேன்.

அந்த சமயத்தில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தயாராகி தொழுவதற்காக வரிசையில் நின்றனர். நான் பின்னால் அமர்ந்தேன். நான் கதறி அழுது, யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்த பிறகு, யூசுப் இஸ்லாமிடம் சென்று நான் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என்ன சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கச் சொன்னேன்.

ஆங்கிலத்தில் அதற்குரிய விளக்கத்தை விளக்கிய பிறகு, நான் அரபியில், வணங்குவதற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார் என்றும் ஓதினேன்” என்று கண்ணீரைத் துடைத்தபடி நினைவு கூர்ந்தார். தவ்பீக் அவர்கள்.

இஸ்லாத்தின் தோட்டங்கள்: -

இவ்வாறு இவருடைய வாழ்க்கை ஒரு மாறுபட்ட கோணத்தை அடைந்து எகிப்திலே வாழ்ந்து கொண்டு இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய புத்தகத்தை எழுதினார்.

தன்னுடைய புத்தகத்துக்கு ஏன் “சந்தோஷத்தின் தோட்டங்கள்” என்று பெயரிட்டார் என்று விளக்கும்போது “இது இஸ்லாத்தைப் பற்றிய ஒரு எளிமையான சுய விமர்சனம். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம் அல்ல என்றும் மேலும் அது வெறுப்பை உண்டு பண்ணக் கூடிய மதமாக இல்லை என்றும் ஒவ்வொருவரும் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் இஸ்லாம் என்றால் என்ன? என்று யாரும் விளக்குவதற்கு முயற்சி செய்யவில்லை”

ஆகையால், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்குவதற்காக இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முடிவு எடுத்தேன். இஸ்லாம் ஒரு அழகான மார்க்கம் என்றும், அது எண்ணிலடங்கா பொக்கிஷங்களை கொண்டுள்ளது என்றும், முஸ்லிமாக இருந்து ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துவது என்றும் சொல்வதற்கு முயற்சி செய்தேன்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “உன் சகோதரனை பார்த்து புன்முறுவல் செய்வதும் தர்மம்” எனக் கூறினார்கள் என்று தஃபீக் கூறினார்.

மேலும் தவ்ஃபீக் அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்கள். அந்த புத்தகம், இதுவரை வெளிவந்த புத்தகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்றார்.

இஸ்லாத்தின் உண்மையான தோற்றத்தை, இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்ட வேகமான மற்றும் மிகச் சிறந்த வழி இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து காட்டுவது தான் என்று தவ்ஃபீக் நினைக்கிறார் .

விடியோ இணைப்பு : தவ்ஃபீக் அவர்களுடனான பேட்டி

கட்டுரையின் ஆங்கில மூலம் : www.islamreligion.com

Jun 4, 2008

பெரும் பாவங்கள்!

பெரும் பாவம், சிறிய பாவம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை தவிர்த்துக் கொள்வது எப்படி? போன்றவற்றை புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட ஒரு சிறிய முயற்சி. நம் வாழ்க்கையின் தரம், இவற்றைப் பற்றிய அறிவை அறிந்துக் கொள்வதில் தான் உள்ளது.

அல்லாஹ் திருமறையில் நம்முடைய “பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளாத வரையில் நம்முடைய சிறிய பாவங்களை மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான் (4:31)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில், நாம் பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து நேரத் தொழுகை அவற்றுக்கு இடையே உள்ள சிறிய பாவங்களை களைந்து விடுகிறது. பெரும் பாவங்கள் நம்முடைய அமல்களை வீணாக்கி விடும்” என்று கூறினார்கள்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (அல்-குர்ஆன் 47:33)

அறிஞர்கள், பெரும் பாவங்களின் தொகுப்பை பல நூல்களில் விளக்கி உள்ளனர். அவற்றில் ஒன்று தான் இமாம் அத்தஹபி அவர்களின் நூல். அது சுருக்கமாக தொகுக்கப்பட்டு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.

பெரும் பாவங்கள்!

1) அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

வணக்கங்களில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரிய (பாவமாகும்) இணைவைப்பு ஆகும்.

சிறிய இணைவைப்பு - ரியா : -

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “தஜ்ஜாலின் அபாயத்தை விட அதிகமான ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவில்லையா? ஒரு மனிதன் தொழுகைக்காக நின்று, மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தொழுகையை அழகாக்குகிறார்” (இப்னு மாஜா)

2) கொலை செய்தல் (25:68)

3) சூனியம் செய்தல். (2:102)

4) தொழுகையை விட்டு விடுதல். (19:59)

5) ஜகாத் கொடுக்காமல் இருத்தல். (3:180)

6) காரணமில்லாமல் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காமல் இருத்தல்.

7) வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் இருத்தல்.

8.) பெற்றோருக்கு மாறு செய்தல். (17:23)

9) சொந்த பந்தங்களின் உறவை முறித்தல். (47:22)

10) விபச்சாரம் செய்தல். (17:30)

11) ஆண் புணர்ச்சி செய்தல்.

12) வட்டி வாங்குதல் & கொடுத்தல் (2:275)

13) அனாதைகளின் சொத்தை அபகரித்தல். 4(10)

14) அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்.(39:60)

15) போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடுதல். (8:16)

16) ஒரு அரசனாக இருந்து கொண்டு தவறு செய்தல், ஏமாற்றுதல், அடக்கு முறைசெய்தல். (அஷ் ஷுஅரா:42)

17) தற்பெறுமை, ஆணவம் கொள்ளுதல். (அந் நஹ்ல்:23)

18) பொய் சாட்சி சொல்லுதல் (25:72)

19) போதை வஸ்துக்களை குடித்தல் (5:90)

20) சூதாடுதல் (5:90)

21) குற்றமில்லாத பெண்கள் மீது அவதூறு சொல்லுதல் (24:23)

22) போரில் கிடைத்த பொருளில் இருந்து மோசடி செய்தல் (3:161)

23) திருடுதல் (5:38)

24) கொள்ளை அடித்தல் (5:33)

25) தவறான சத்தியம் பிரமாணம் செய்தல்.

யாராவது ஒருவர் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லும்போது, ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிப்பதற்காக தவறான சத்தியம் செய்தல், அவர் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ்வி கோபத்துக்கு ஆளாவார் (சஹீஹ் அல் ஜாமிஆ)

26) அடக்கு முறையை கையாளுதல்.

27) சட்டவிரோதமாக வரி விதித்தல்

திவாலானவர் யார் என்று தெரியுமா? மறுமை நாளில் தொழுது, நோன்பு நோற்று ஜகாத் கொடுக்கப்பட்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால் அவர் மற்றவர்களை ஏசி, அவதூறு கூறி அவர்களுடைய சொத்துக்களை தவறான வழியில் எடுத்து, அவர்களின் இரத்தத்தை பூமியில் சிந்தியவராவார். அவர்களின் நல்ல அமல்கள் எடுக்கப்பட்டு அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். அது முடிந்து விட்டால் இவர்களுடைய தீமைகள், பாவங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். (சஹிஹ் அல் ஜாமிஆ 87)

28) தடுக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல். (2:188)

29) தற்கொலை செய்து கொள்ளுதல். (4:29)

30) தொடர்ந்து பொய் சொல்பவர் (3:61)

31) இஸ்லாமிய சட்டங்களை விட்டுவிட்டு மற்ற சட்டங்களை வைத்து ஆட்சி செய்பவர் (5:44)

32) லஞ்சத்தில் ஈடுபடுதல் (2:188)

33) பெண்கள் ஆண்களைப்போல அல்லது ஆண்கள் பெண்களை போல தோன்றுதல்

‘ஆண்களைப் போல தோன்றும் பெண்கள் மீதும் பெண்களைப் போல தோன்றும் ஆண்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக’ என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சஹீஹ் அல் ஜாமிஆ)

34) ‘தய்யூத்’ ஆக இருப்பது

‘தய்யூத்’ என்பவர், தன் வீட்டுப் பெண்களை அநாகரிகமான செயல்களைச் செய்வதற்கு அனுமதிப்பவரும், பொறாமைப்படுபவரும், இரண்டு பேர்களுக்கிடையே அருவருக்கத் தக்க செயல்களைச் செய்வதற்கு ஏற்பாடு செய்பவரும் ஆவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”

35) திருமணம் முடித்து, மனைவியை மற்றவர்களுக்காக கொடுப்பது.

36) சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லறையின் பக்கம் சென்ற போது சொன்னார்கள், “இவர்கள் இருவரும் மிகப் பெரும் விஷயத்துக்காக தண்டிக்கப் படவில்லை; ஒருவர் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யவில்லை; மற்றவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்” (சஹீஹ் அல் ஜாமிஆ)

37) மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக செயல்படுவது (107:4-6)

38) உலக லாபத்துக்காக அறிவைப் பெறுதல் (2:160)

39) உடன் படிக்கையை முறித்தல் (8:27)

40) ஒருவர் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது (2:27)

41) களா கத்ரை மறுப்பது (54:49)

42) ஒட்டுக் கேட்பது (49:12)

43) கட்டுக் கதைகளை பரப்புவது (54:10)

44) மற்றவர்களை ஏசுவது ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் (சஹிஹ் அல் ஜாமிஆ)

45) வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: அவற்றில் ஒன்று வாக்குறுதி கொடுத்தால் அதற்கு மாறுசெய்வான். (புகாரி)

46) குறி சொல்பவர்களையும், ஜோசியத்தையும் நம்புவது.

“யார் ஒருவர் குறி சொல்பவரிடம் சென்று அவர் சொல்வதை நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

47) கணவனுக்கு மாறுசெய்வது (4:34)

48) துணிகளில், திரைச்சீலைகளில் உருவ படங்களை வரைதல்.

49) ஒருவரின் இறப்புக்காக அடித்துக் கொள்ளுதல், கதறி அழுதல், துணிகளை கிழித்துக் கொள்ளுதல், முடிகளை இழுத்தல்.

50) அநீதி இழைத்தல்

51) மற்றவர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல்.

52) அண்டை வீட்டார்களை துன்புறுத்துதல்.

“தன்னுடைய துன்புறுத்தலில் இருந்து யார் ஒருவரின் அண்டை வீட்டுக்காரர் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்”

53) முஸ்லீமை ஏசுவது, அவர்களை தொந்தரவு செய்வதும் (33:58)

54) கனுக்காலுக்கு கிழே ஆடை அணிவது

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “யார் கனுக்காலுக்கு கிழே ஆடை அணிகிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் வீசப்படுவார்கள்” என்று கூறினார்கள். (புகாரி)

55) அல்லாஹ்வின் அடிமையை தொந்தரவு செய்வது.

56) தங்கம், வெள்ளி அணியும் ஆண்கள்

57) அடிமையை விட்டுவிட்டு ஓடி விடுவது

58) அல்லாஹ்வுக்கு அல்லாமல் மற்றவர்களுக்காக பலியிடுவது

59) உண்மைக்கு புறம்பாக, ஒருவரை இன்னாருடைய தந்தை என்று கூறுவது.

60) மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது.

61) மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது

62) அளவையில் மோசம் செய்தல் (83:1-3)

63) அல்லாஹ்வின் திட்டத்தில் இருந்து பாதுகாப்பு பெற்றதாக நினைப்பது

64) பன்றியின் இறைச்சி, இரத்தம் சாப்பிடுவது

65) காரணமில்லாமல், பள்ளி வாசலை விட்டு விட்டு, தனியாக தொழுவது

66) ஜும்ஆ தொழுகை, மற்றும் ஜமாஅத் தொழுகைகளை காரணமில்லாமல் தொடர்ச்சியாக தொழாமல் இருப்பது

67) செல்வாக்கை பயன்படுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்வது

68) பித்தலாட்டங்கள், வஞ்சகங்கள் செய்வது

69) முஸ்லீம்களை வேவு பார்ப்பது

70) சஹாபாக்களை நித்தனை செய்வது.

ஆங்கில மூலம் : www.allaahuakbar.net.in

Jun 3, 2008

பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

நாம் வாழும் பூமிக்கும், நமக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயமாகிய வாணவெளிக்கும் இடையில் பல்வேறு வாயுக்களைத் தன்னகத்தே அடங்கிய காற்று மண்டலம் இருக்கிறது. இந்த காற்று மண்டலம் இல்லையென்றால் இந்த பூமியில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. இந்த காற்று மண்டலம் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ளதாக தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சூரியனிலிருந்து இடைவிடாமல் பூமியை நோக்கி வீசிக்கொண்டிருக்கும், மனிதர்களுக்குப் பல்வேறு கேடுகளை விளைவிக்கக் கூடிய அழிவுக் கதிர்களான புற ஊதாக்கதிர்கள் பூமியின் மேற்பரப்பையும் அதில் வசிக்கும் உயிரினங்களையும் தாக்காமல் தடுத்துக்கொண்டிருக்கும் ஓசோன் என்ற வாயு மண்டலமும் இந்த காற்று மண்டலத்தில் தான் உள்ளது.

இதைத் தவிர சூரியனிலிருந்து அவ்வப்போது பூமியை நோக்கி வீசும் படு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெப்பக் கதிர்களையுடைய சூரியப் புயல் பூமியைத் தாக்கா வண்ணம் பூமிக்கு ஒரு கூரையாக அமைந்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூமியின் காந்த மண்டலமும் பூமிக்கும் வாணத்திற்கும் இடையே தான் அமைந்துள்ளது.

இவைகளை சமீபத்தில் தான் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். இவைகளை சாதாரணமாக வெறும் கண்களால் பார்த்தால் பார்க்க முடியாது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில் நாம் பல்வேறு நவீன கருவிகளின் உதவியுடன் பூமிக்கும் வாண்வெளக்கும் இடையில் இவைகள் இருப்பதை அறிய முடிகிறது.

ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இவைகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது என்று கூறினால் நமக்கு ஆச்சரியாகத் தோன்றுகிறதல்லவா!

ஆம். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் அவனுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவற்ற கருணையினால் அவர்களுக்கு நேர்வழி காட்ட அவனருளிய சத்திய திரு வேதத்திலே இந்த பூமிக்கும் வாணத்திற்கும் இடையேயும் அவனுடைய படைப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறான். இறைவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதோடு அல்லாமல் இவை இரண்டிற்கும் இடையில் பல வாயுக்களை உள்ளடக்கிய காற்று மண்டலத்தையும், காந்த மண்டலம் மற்றும் நாம் அறியாதவைகளைப் படைத்திருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகிறான் : -

“அவன் பெரும் பாக்கியம் உடையவன்: வானங்கள், பூமி இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே. அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கின்றது. மேலும் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” (அல்குர்ஆன்: 43:85)

“நீங்கள் உறுதியுடையவர்களாக இருப்பின் வானங்கள், பூமி இவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்)” (அல்குர்ஆன்: 46:3)

இதைப்போல இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும்: 78:7, 26:24, 37:5, 38:10, 38:27, 38:66.

இவைகள், திருமறை ஓர் இறைமறை என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும்!

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்!

நரகத்தில் இருந்து மீட்சி அடைதல்! (Salvation from Hell fire!)

எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 3:91)

சொர்க்கம் செல்வதற்கும் நரகத்தில் இருந்து விடுதலை அடைவதற்கும் இந்த உலக வாழ்க்கை ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது. ஏனெனில் இறை நிராகரிப்பாளராக ஒருவர் மரணித்து விட்டால் மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து நம்பிக்கையாளராக மாறுவதற்கு சந்தர்ப்பம் கண்டிப்பாக கிடைகாது. மறுமை நாளில் இறை நிராகரிப்பாளர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று திருமறையில் இறைவன் குறிப்பிடுகிறான்.

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், ‘எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம் நாங்கள் முஃமின்களாக இருப்போம்’ எனக் கூறுவதைக் காண்பீர். (அல்-குர்ஆன் 6:27)

ஆனால் ஒருவருக்குக் கூட இரண்டாவது சந்தர்ப்பம் கிடைக்காது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ்ந்த, மறுமை நாளில் நரகத்துக்குரிய ஒருவரை ஒரு முறை நரகத்தில் முக்கி எடுக்கப்பட்டு பின்பு அவரிடம் ஆதமுடைய மகனே! நீ இங்கு ஏதாவது சுகத்தையோ அல்லது அருளையோ பார்க்கிறாயா என்று கேட்கப்படும். அவன் இறைவன் மீது ஆணையாக இல்லை என்று சொல்லுவான் .

இந்த உலகத்தில் கஷ்டத்துடன் வாழ்ந்த, மறுமையில் சுவர்க்கத்துக்கு உரிய ஒருவரை, ஒரு முறை சொர்க்கத்தில் முக்கி எடுக்கப்பட்டு அவரிடம் இங்கு ஏதாவது கஷ்டத்தையோ, துன்பத்தையோ பார்க்கிறாயா என்று கேட்கப்படும். அவர் இறைவன் மீது ஆணையாக இல்லை என்று சொல்வார்.

கட்டுரையின் ஆங்கில மூலம் : www.islamreligion.com

Jun 2, 2008

இவ்வுலகை அதிகமாக நேசிப்பதன் விளைவுகள்! - Audio/Video

சிறப்புரை : மெளலவி ஜமால் முஹம்மது மதனி

நாள் : 29-05-2008

இடம் : அல்-கப்ஜி

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video

மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்-குர் ஆன் 4:170)

இறைவன், அனைத்து மனிதர்களையும், தன்னிடமிருந்து உண்மையை கொண்டு வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு தூதராக ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறான். இறைவனின் தூதர் என்பவர், இஸ்லாமிய பார்வையில், நபிமார்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஆவார். நபி என்பவர் இறைவனின் உதவியுடன், எதிர் காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்பவர் ஆவார். தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்பட்ட, இறைவனிடமிருந்து பெறப்பட்ட செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைப் போன்றவராவார்.

வஹீ என்பது இறைவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் குறிக்கும் சொல். இஸ்லாமிய மரபுப்படி அனைத்து தூதர்களும் நபிமார்கள் ஆவார்கள். ஆனால் அனைத்து நபிமார்களும், தூதர்களாக ஆக மாட்டார்கள். ஆப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அனைவர்களும் தூதராவார்கள்.

ஏன் ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைவனின் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோஸஸ் மற்றும் ஜீஸஸ் வேதங்களில் சொல்லப்பட்டவைகளை பூர்த்தி செய்தவர் ஆவார்.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தவறே இல்லாத குணத்துக்கு சொந்தக்காரர். அவர்கள் வாழ்ந்த ஒரு பரிபூரணமான வாழ்க்கையை பாதுகாக்கப்பட்டது போல உலகில் வேறு எந்த மனிதரின் வாழ்க்கையும் பாதுகாக்கப்படவில்லை. அவர்களின் மார்க்க போதனைகளும், நற்குணங்களும் தற்கால உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த திருகுர்ஆன், மிகச் சிறந்த அற்புதமாக மட்டும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பாதுகாக்கப்பட்ட ஒரே வேத நூலாகவும் உள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில், அவர்களும் அவர்கள் கொண்டுவந்த வேதமும் உண்மையானதாக உள்ளது. ஆகையால் யார் இந்த மனிதரைப் பற்றி அறியவில்லையோ, அவர்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். யார் இந்த மனிதரை நம்புகிறாரோ அவர் இறைவன் சொல்வதைப் போல இந்த உலகத்தில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்வார். மேலும் மரணத்திற்குப் பிறகு சுவர்க்கத்தில் நிரந்தரமாக வசிப்பார். யாராவது ஒருவர் இந்த மனிதரை நிராகரித்தால் (அதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனை நிராகரித்தால்) இறைவனுக்கோ அல்லது அவனுடைய தூதருக்கோ எந்த ஒரு தீங்கும் இல்லை. மாறாக அது நிராகரிப்போருக்குத்தான் தீங்காக முடியும். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானது. அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனாகவும் அவன் கட்டளையிடுவ உள்ளான்.

கட்டுரையின் ஆங்கில மூலம் : www.islamreligion.com

சத்திய இஸ்லாத்தை நோக்கி மேற்கத்தியர்கள்! - Audio/Video

உரை : மெளலவி முஹம்மது லாஃபிர் மதனி

நாள் : 16-05-2008

இடம் : அல்-கப்ஜி தஃவா மற்றும் வழிகாட்டி மையம்

Link : Audio/Video

நஃப்ஸின் வகைகள்! - Audio/Video

உரை : மெளலவி முஹம்மது லாஃபிர் மதனி

நாள் : 23-05-2008

இடம் : அல்-கப்ஜி தஃவா மற்றும் வழிகாட்டி மையம்

Link : Audio/Video

நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் - Audio/Video

சிறப்புரை : மெளலவி ஜமால் முஹம்மது மதனி

நாள் : 29-05-2008

இடம் : அல்-கப்ஜி

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கப்ஜி தஃவா சென்டர்

Link : Audio/Video