Jun 10, 2008

நபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்!

‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த முன்று விஷயங்களாவன:

1) முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
2) எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
3) எவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார் என்று கூறினால் அவா பொய்யுரைத்துவிடடார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

இந்த ஹதீஸிலிருந்து நாம் முத்தான மூன்று விஷயங்களைத் தெரிந்துக் கொள்கிறோம்.

முதலாவது, நம்மவர்களில் சிலர் நினைத்துக் கொணடிருப்பதைப் போல் முஹம்மது (ஸல்) அவர்களோ அல்லது வலிமார்கள் என்று சொல்லப்படக் கூடிய இறைநேசர்களோ அல்லது அபூஹனீபா (ரஹ்) போன்ற இமாம்களோ இறைவனைப் பார்த்ததில்லை. அவ்வாறு பார்த்ததாக சொல்லப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதால் அச்செய்திகள் எல்லாம் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.

மேலும் இதை திருமறையின் பின்வரும் வசனங்கள் உறுதி படுத்துகிறது.

“பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்-குர்ஆன் 6:103)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்’ என்று கூறினார். (அல்-குர்ஆன் 7:143)

மேற்கண்ட இறைவசனங்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

இரணடாவது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளங்கிக் கொள்ள வேணடும். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. இதை அல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களைத் தமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்று கூறுமாறு திருமறையில் கடடளையிடடுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)

(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)

மூன்றாவதாக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த செய்திகளில் எதையாவது ஒன்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார்கள் அல்லது அவர்கள் மறந்து விடடார்கள் என்று எவரேனும் கூறினால் அவர் பொய்யராவார்.

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை அடைவதற்குரிய? சில ஞான? இரகசியயங்களை சாதாரன மக்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டு அலி (ரலி) அவர்களுக்கு மடடும் சொல்லி விடடுச் சென்றதாகவும் அந்த இரகசியங்கள் பரம்பரையாக தங்களுக்கு மடடும் வந்துக் கொணடிருப்பதாகவும் ஸுஃபிகள் என்று சொல்லப்படக்கூடிய சில போலிகள் கூறிக்கொண்டு சாதாரண பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பில் தங்கள் வயிறுகளை வளர்த்து வருகிறார்கள்.

எனவே எராளமான ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்கள் மூலம், தாங்கள் இறைவனைப் பார்த்ததாகவும், தங்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும் என சொல்லிக் கொணடுத் திரியும் ஸுஃபிகள், பீர்கள், செய்குமார்கள், ஞானிகள், குத்புமார்கள் அனைவரும் பொய்யர்களே என்பதை விளங்கிக் முடியும்.

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.