Jun 19, 2008

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் - பெண்னுரிமை பகுதி - 3

பெண்களின் மாதவிடாய் குறித்து பைபிள்: -

மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஏழு நாள் தன் விலக்கத்தில் இருக்க வேண்டும். அவளைத் தொடுகிறவனும் சாயங்காலம் வரைக்கும் தீட்டுப்பட்டிருக்க வேண்டும். அவள் எதில் படுத்திருக்கிறாளோ அல்லது எதின் மீது உட்கார்ந்திருக்கிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையை, அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தண்ணீரில் தோய்த்து, தண்ணீரில் முழுகி சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

என்ற கருத்தில் பைபிளின் பழைய ஏற்பாடு, லேவியராகமம் அதிகாரம்: 15, வசனம்: 19-23 ல் கூறப்பட்டிருக்கிறது.

மாதவிடாய் குறித்து இஸ்லாம்: -

அலி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டு வியர்வையின் காரணமாக அவர்களின் ஆடைகள் அவர்களோடு ஒட்டிக் கொண்டாலோ அல்லது மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண்ணின் உடம்பில் அவனுடைய ஆடை ஒட்டிக் கொண்டாலோ அந்த ஆடைகள் “அசுத்தமானதாகக்” கருதப்படுமா என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் , “இல்லை! அசுத்தம் என்பது விந்தும் , (மாதவிடாயின்) இரத்தமும் மட்டும்தான்” என்று பதிலளித்தார்கள்.

சிறிய விளக்கம்!

இறைவன் பெண்களுக்கு குழந்தைப்பேறுக்காக நியமித்துள்ள மாதவிடாய் என்பதை பைபிள் அனுகும் விதத்தையும் இஸ்லாம் மார்க்கம் அனுகும் விதத்தையும் அறிந்து இயற்கையோடு ஒத்துப்பாகிற மார்க்கம் எது? என சிந்திக்க கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டுள்ளார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் ஏழு நாட்களுக்கு தீட்டு பட்டிருப்பாள் என்பதோடல்லாமல் அவள் படுத்திருக்கும் அல்லது உட்கார்ந்திருக்கும் அனைத்தும் தீட்டு பட்டிருக்கும் அவைகளைத் தொடுகிறவனுக்கும் அந்த தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்று பைபிள் கூறுகிறது. தாங்களே செயல்படுத்தாத, நடைமுறைக்கு ஒத்துவராத இவைகள் இறைவனால் அருளப்பட்டவைதானா? அல்லது இவைகள் பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? என கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சிந்திக்க வேண்டும்.

ஆனால் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் அனுப்பிய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனை என்ன வென்றால்,

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணோ அல்லது அவள் தொடுகின்ற எதுவுமே தீட்டுகிடையாது, மாதவிடாயின் இரத்தம் மட்டுமே தீட்டாகும் எனக் கூறுகின்றார்கள்.

அகில உலக மனிதர்களுக்கெல்லாம் நேர்வழி வழிகாட்டுவதற்காக சத்தியம் எது? அசத்தியம் எது? என்று பிரித்தறிவதற்காக இறைவன் அருளிய அவனுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்: -

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்-குர்ஆன் 38:29)