உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
ரியாளுஸ் ஸாலிஹீன் விளக்கங்கள்
இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா
நாள் : 09-05-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்
Link : Audio/Video
Showing posts with label தவ்ஹீத். Show all posts

May 26, 2008
Feb 5, 2008
இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.
செல்வம் சேர்த்தல், அழகான பெண்களை அடைவது, குழந்தைச் செல்வங்கள் பெறுவது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக ஆசை வைப்பது இவைகள் தான் பெரும்பாலான சதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய ஆசைகளாகும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூற வில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என பலர் தமது வாழ்நாள் முழுக்க செலவழித்து அவைகளை அடைவதற்காக எதை எதையோ இழந்து, குறிப்பாக தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும், கை கால் ஆரோக்கியமாக இருக்கும் இளமையையும் இழந்து விடுகின்றனர். ஒரு மனித படைப்பின் நோக்கம் இது மட்டுமா என்றால் நிச்சயமாக இல்லை சகோதர, சகோதரிகளே!
நம்மைப் படைத்த இறைவனுக்கு பயந்து, அவனையே வணங்கி, அவனுடைய திருப்தியை பெற வேண்டி நல்ல அமல்கள் புரிவது என்பதுதான் ஒவ்வொருவருடைய வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர் கடுமையாக முயற்சி செய்து உழைக்க வேண்டும். அதற்குண்டான பயிற்சியை தனது ஆத்மாவிற்கு அவர் கொடுக்க வேண்டும். அது தான் நம்மை படைத்த அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ் இந்த மனித சமுதாயத்தின் மீது ஏற்படுத்தியிருக்கின்ற தேர்வு (பரிட்சை) ஆகும். இந்த தேர்வில் நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டியது மறுமை வாழ்விற்கு மிக மிக அவசியமாகிறது.
நம்மில் எத்தனை பேர் நிரந்தரமற்ற இந்த மாய உலகத்தின் மீதுள்ள அதீத ஆசைகளைக் கட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக மறுமையில் அல்லாஹ்வின் வாக்குறுதியான நிரந்தரமான சுவனபதியின் சோலைகளையும், இறைவனின் திருப்தியையும் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?
யார் ஒருவர் அல்லாஹ்வுக்கு பயப்படுவதைத் தேர்ந்தெடுத்து, ஆசைகளைக் குறைப்பதன் மூலம் தனது ஆத்மாவைக் கட்டுப்படுத்தி, தனது மனோஇச்சைகளையும் கட்டுப்படுத்தி, தனது விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கிணங்க ஆக்குகிறாரோ அவர் தான் அல்லாஹ் விதித்த தேர்வில் வெற்றி பெற்றவராவார்.
ஆனால் யார் ஒருவர், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அழியக் கூடிய உலகின் ஆடம்பரங்கள் மற்றும் இன்பங்கள் இவற்றின் பின்னால் சென்று, தனது மனோ இச்சைகளுக்குக் கட்டுப்பட்டு நம்மைப் படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட மறுக்கிறாறோ அவர் தமக்கு அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட தேர்வில் தோல்வி அடைந்தவராவார்.
அத்தியாயம் 79, ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), வசனங்கள் 34-41 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
79:34 எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
79:35 அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
79:36 அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:37 எனவே, எவன் வரம்பை மீறினானோ-
79:38 இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
79:39 அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
79:40 எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
79:41 நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
இறையச்சத்தை (தக்வா) அதிகப்படுத்துவது எவ்வாறு?
ஒருவர் தன்னுடைய இறையச்சத்தை (தக்வாவை) அதிகப்படுத்துவதற்கு முன்னால் அவர் அறிந்துக் கொள்ள வேண்டியவைகளாவன: -
நம்மைப் படைத்த இறைவன் யார்?
எதற்காக இப்பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ளவற்றையும் படைத்தான்?
எதற்காக நம்மைப் படைத்திருக்கிறான்?
இறைவனை திருப்தி படுத்தக் கூடிய செயல்கள் யாவை?
இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் யாவை?
இறைவன் அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்கக் கூடியவர்களுக்கு வாக்களித்திருக்கும் நன்மைகள் யாவை?
இறைவனுடைய கட்டளைகளை மீறி நடப்பவர்களுக்கு அவன் தரப்போகும் தண்டனைகள் யாவை?
என்பன போன்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நம்மைப் படைத்த இறைவன் அனைத்திற்கும் வல்லமையும் ஆற்றலும் படைத்தவன் மட்டுமல்லாது மிக்க கருணையாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். அல்லாஹ் மனிதனைப் படைத்து மேற்கண்ட வினாக்களுக்கு அவனாகவே விடைத் தேடிக் கொள்ளுமாறு அவனைத் தன்னந் தனியாக விட்டு விடவில்லை. மாறாக அல்லாஹ் மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் உரிய பதில்களை, தெளிவுகளை மனித குலத்திற்கு வழிகாட்டியாக அவன் அருளிய திருக்குர்ஆனிலே தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறான்.
அத்தியாயம் 2, ஸூரத்துல் பகரா (பசு மாடு), வசனங்கள் 2-5 ல் அல்லாஹ் கூறுகிறான்:
2:2 இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:3 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4 (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5 இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
எனவே, ஒருவர் தன்னைப் படைத்த இறைவனையும், தனது நிரந்தரமற்ற இந்த குறுகிய உலக வாழ்வின் சோதனைகளைப் பற்றியும் அறிந்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த வழி என்னவென்றால்: -
அவர் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த வல்ல இறைவன் மனிதர்களின் மீது கருணைக் கொண்டு அவர்களுக்கு நேர்வழி காட்ட இறக்கி வைத்த அருள் மறையாம் திருமறை அல்குர்ஆனை பொருள் உணர்ந்து படித்து, புரிந்துக் கொண்டு, அது கூறும் வாழ்வியல் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றைப் பின்பற்றி நடப்பதுவேயாகும்.
இவ்வாறு நாம் அல்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றி நடப்பது என்று முடிவு செய்து, அதன்படி நடந்தால், நம்பிக்கை மற்றும் இந்த உலக வாழ்வின் சோதனைகள் ஆகியவற்றுக்கான அனைத்துக் கேள்விகளுக்குமான தெளிவான விடைகள் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும். அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் இதையே இறை நம்பிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறான்.
இவ்வாறு நாம்,
நம்மைப் படைத்த இறைவன் யார் என்றும்,
இறைவன் நம்மைப் படைத்திருப்பதற்கான நோக்கத்தையும் அறிந்து,
இறைவன் வாக்களித்திருக்கும் என்றும் அழியாத சுவனபதியின் நிரந்தரமான வாழ்வை பெறுவதற்காக,
நம்முடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்வோமேயானால், நம்முடைய முழு வாழ்க்கையின் உன்னதமான இலட்சியம், குறிக்கோள் சுவனபதியை அடைவதை நோக்கியே மாறும். இன்ஷா அல்லாஹ்.
இவ்வாறு, நாம் நமது வாழ்வின் உன்னதமான இலட்சியமாக சுவனபதியை அடைவதையும், அல்லாஹ் மறுமையில் அளிக்க விருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெறுவதையும் அமைத்துக் கொண்ட பிறகு, நமக்கு நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வின் ஆடம்பரங்களும், செல்வங்களும், இன்பங்களும், ஆசைகளும் மதிப்பற்றவைகளாகவும் முக்கியத்துவம் இல்லாதவைகளாகவும் ஆகிவிடும். நம்முடைய முழு முயற்சிகளும் தவிர்க்க இயலாத மறுமையை நோக்கியே அமையும்.
இந்த நிலையையே, அதாவது, ஒவ்வொருவரும் தவிர்க்க இயலாமல் மறுமையின் ஒரே நீதிபதியாகிய, ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ் ஸுப்ஹானத்தஆலாவின் முன்னிலையில் நிற்பதை அஞ்சக் கூடியவர்களாக இருப்பதையே "இறையச்சம்" அல்லது "பயபக்தி" என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
இந்த இறையச்சமே, நம்முடைய வாழ்நாளில் நற்கருமங்கள் செய்வதற்குத் தூண்டி, அதிக நம்மைகளைக் கிடைக்கச் செய்து, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தந்து, மறுமையில் நமக்கு இறைவன் வாக்களித்த சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும். இன்ஷா அல்லாஹ்.
இந்த இறையச்சமே, நம்மை அல்லாஹ்வுக்கு கோபத்தை உருவாக்குகிற செயல்களைச் செய்வதை விட்டும் தடுத்துவிடும். இன்ஷா அல்லாஹ்.
தக்வா (இறையச்சம்) என்பது: -
அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாத, அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு செயலைச் செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருப்பதும்,
அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்கின்ற நற்கருமங்களைச் செய்வதும் ஆகும்.
தக்வா (இறையச்சம்) என்பது: -
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்்பொழுதையும், தவிர்க்க இயலாத மறுமை நாளில் நாம் நம்மைப் படைத்த இறைவனின் முன்னிலையில் நிறுத்தப்படுவோம் என்று உறுதியாக நம்புவதும்,
நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவனுக்கு கணக்கு கூறக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம் என்றும் உறுதியாக நம்புவதும் ஆகும்.
தக்வா (இறையச்சம்) என்பது: -
ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்னால், அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவானா அல்லது கோபமடைவானா என ஆராய்ந்து தீர்மானிப்பதாகும்.
அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவான் என கருதினால் அதை முழு மனதோடு இறை திருப்திக்காக மட்டுமே செய்வதாகும்.
அந்தச் செயலைச் செய்தால் இறைவன் கோபமடைவான் என கருதினால் அதைச் செய்வதை விட்டும் உடனடியாக தவிர்ந்துக் கொள்வதாகும்.
தக்வா (இறையச்சம்) என்பது: -
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அவைதற்காக என்ற எண்ணத்தின் அடிப்படையிலே நற்கருமங்கள் புரிவதும்
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்்பொழுதிலும் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்த ஒரு செயலை விட்டும் தவிர்ந்திருப்பதும் ஆகும்.
நாம் அல்குர்ஆனை படித்துப் பார்த்தால், இறைவன் சுவனபதியை வாக்களிக்கும் பல இடங்களில் தக்வாவை (இறையச்சத்தை)ப் பற்றியும் கூறுவதைப் பார்க்கலாம்.
அத்தியாயம் 3, ஸூரத்துல்ஆல இம்ரான்;(இம்ரானின் சந்ததிகள்), வசனம் 133ல் அல்லாஹ் கூறுகிறான்: -
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 50, ஸூரத்து ஃகாஃப், வசனங்கள் 31-33 ல் அல்லாஹ் கூறுகிறான்:-
50:31 (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
50:32 'இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).'
50:33 எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
அத்தியாயம் 52, ஸூரத்துத் தூர் (மலை), வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்:
52:17 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
52:18 அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
அத்தியாயம் 68, ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), வசனம் 34 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
68:34 நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் (தேனி), வசனம் 31 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
16:31 என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.
அத்தியாயம் 2, ஸூரத்துல் ஃபுர்ஃகான்(பிரித்தறிவித்தல்), வசனங்கள் 15-16 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
25:15 அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்' என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும்.
25:16 'அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.'
ஆகையால், சகோதர, சகோதரிகளே நாம் மீண்டும் நினைவு கூர்வோம்: - நம்மைப் படைத்த இறைவனைப் பற்றிய பயம், அச்சம் பயபக்தி நம் உள்ளத்தில் இடம்பெறுவதற்கு, நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இறையச்சத்துடன் கூடிய வாழ்வு நெறியை மேற்கொள்வதற்குரிய மிகச் சிறந்த வழி என்னவென்றால்: -
அது அல்லாஹ்வின் அருள்மறையாம் திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து படித்து, புரிந்துக் கொண்டு, அவன் குர்ஆனில் கூறியிருக்கின்ற வாழ்வு நெறிமுறைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டு, அவற்றைப் பின்பற்றி நடந்து, நம்முடைய முழு விருப்பு வெறுப்புகளை அல்லாஹ் தன் திரு மறையில் அருளிய கட்டளைகளுக்கிணங்க மாற்றி அமைத்துக் கொள்வதேயாகும்.
அல்லாஹ்வே நமது சாட்சி, யார் சிரத்தையுடன் அல்லாஹ்வுடைய வேதமாகிய திருக்குர்ஆனுக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடக்கிறாரோ, இன்ஷா அல்லாஹ் அவர் தமது வாழ்நாட்களை அல்லாஹ்வை அதிகமாக வணங்குவதிலும், தொழுகையை நிலை நாட்டுவதிலும், ஜக்காத் கொடுப்பதிலும், ஹஜ் செய்வதிலும், சகோதரத்துவத்தைப் பேணுவதிலும் செலவழிப்பார். மேலும் அவரது ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.
அல்லாஹ் ஸுபுஹானத்தஆலா உங்களுக்கும், எங்களுக்கும் மற்றும் முஃமினான ஆண் பெண் அனைவருக்கும் கருணை புரிந்து, அவனது திருப்தியுடன் சுவனபதியைப் பெற்றுத்தரவல்ல அவனது இந்த நேரான பாதையைத் தேர்ந்தெடுக்கும் மன உறுதியைத் தந்து, அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற அனைத்துச் செயல்களிலிருந்தும் தவிர்ந்திருக்கக் கூடிய மன வலிமையத் தந்தருள்வானாகவும். ஆமீன்

Feb 3, 2008
இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்
தவ்ஹீது (ஏகத்துவம்)
தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்று பெயர்.
இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.
தவ்ஹீதின் வகைகள்: -
தவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: -
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: -
இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யத்” என்று பெயர்.
அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: -
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங்கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீதுல் உலூஹிய்யத்' என்று பெயர்.
அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என உறுதிகொள்வதாகும்.
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: -
அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.
மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.
இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது 'ஷிர்க்' என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப்பானாவும்).

முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம்
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.
அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய சூழ்நிலையில் நமது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டியது நம் மீது அவசியமாகிறது. இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதையே பின்பற்றுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் மற்றும் பிரிவுகள்?
உண்மையில் இவர்கள் அனைவரும் தம்மை "முஸ்லிம்கள்" என்றே கூறிக் கொள்கின்றனர். மேலும் இவர்கள் "வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை எனவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி தூதர்" எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அல்லாஹ் தன் திருமறையில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களை பின்பற்றுமாறு முஃமின்களுக்கு கட்டளையிட்டுள்ளான். எனவே தம்மை முஃமின் என கூறிக்கொள்ளும் ஒருவர் நபி (ஸல்) அவர்களை தமது வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி நடப்பது அவர் மீது கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:79-80)
(நபியே!) நீர் கூறும்: 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (நபியே! இன்னும்) நீர் கூறும்: 'அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்.' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3:31-32)
அனைத்து முஸ்லிம்களும் உண்மையில் அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்தால், நிச்சயமாக அவர்களின் வாழ்வு நெறிகளில் இத்தனை வேறுபாடுகள் ஏற்பட்டிருக்காது. ஆனால், முஸ்லிம்களுக்கிடையே இத்தனை வேறுபாடுகள் நிறைந்திருப்பதற்ககான ஒரே காரணம் என்னவெனில்: -
தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்வோர், அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் விட்டு விட்டு தாமாகவே பல பிரிவுகளையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கி அவற்றைப் பின்பற்றி நடப்பது தான்.
இவ்வாறாக சிலர் ஷியா, சுன்னி, இஸ்மாயில், போஹ்ரா, இத்னா அஸ்ஹரிஸ் போன்ற பல பெயர்களில் தம்மை அழைக்கின்றனர். இந்தப் பெயர்களில் எதுவும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாததாகும். ஆனால் இவைகள் அனைத்தும் மனிதனின் கண்டு பிடிப்புகளே தவிர வேறில்லை. அல்லாஹ் ஸுபுஹானத்தஆலா, திருமறையையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் பின்பற்றி வாழும் இறை நம்பிக்கையாளர்களக்கு சூட்டிய பெயர் "முஸ்லிம்கள்" ஆகும். எனவே அல்லாஹ்வையும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களையும் பின்பற்றி வாழும் ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் தமக்கு அல்லாஹ் சூட்டிய பெயரான "முஸ்லிம்" என்பதில் திருப்திக்கொண்டு, அந்தப் பெயரில் தம்மை அழைப்பதையே அவர் விருப்பமானதாகக் கருத வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன் தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.” (அல்குர்ஆன் 22:77-78)
அல்லாஹ் திருக்குர்ஆனில், இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே உம்மத்து எனவும், ஒரே சகோதரர்கள் எனவும் வழிகாட்டுகிறான். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும் கூட இறை நம்மிக்கையாளர்கள் அனைவரும் ஒரே உம்மத்தாக ஒற்றுமையாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகே சில அறிவிலிகள் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும், சீரிய போதனைகளையும் விட்டு விட்டு இஸ்லாத்தின் பெயரால் புதிய புதிய கொள்கைகளையும், வழிமுறைகளையும் உருவாக்கி மற்ற முஸ்லிம்களிடமிருந்து வேறுபட்டனர். இவர்கள் தாங்களாகவே பல பிரிவுகளையும், சட்ட திட்ங்களையும்,புதிய நம்பிக்கைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் உருவாக்கி, இஸ்லாத்தை விட்டு வெகு தூரம் சென்று விட்டனர். இவ்வாறு இவர்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களை விட்டுவிட்டு தாங்களாகவே உருவாக்கிய கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் இஸ்லாம் மார்க்கம் காட்டும் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டில் செல்கின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான்: -
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான். (அல்குர்ஆன் 45:17)
"இன்னும், நிச்யமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்' (என்றும் கூறினோம்)
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும். (அல்குர்ஆன் 23:52-54)
நேர்வழி காட்டும் புத்தகமாகிய அல்குர்ஆன் இன்று நம்மிடையே அல்லாஹ், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியவாறே இருக்கிறது. மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகரிப்பான, அவர்களின் வழிகாட்டுதல்களான சுன்னத்தும் (ஹதீஸ்களும்) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு இன்று நம்மிடையே இருக்கிறது. உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள், அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தை உண்மையிலேயே பின்பற்றி, அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களான சுன்னத்தையும் பின்பற்றி நடப்பார்களேயானால் முஸ்லிம்களுக்கிடையே இன்று காணப்படும் இத்தனை வேறுபாடுகள் நிச்சயம் இருக்காது.
ஆனால் ஒருவர் அல்லாஹ்வின் வேதத்திற்குப் பதிலாக வேறு புத்தகங்களையோ அல்லது அவனது தூதரின் (ஸல்) வழிகாட்டுதலுக்கு (சுன்னத்திற்குப்) பதிலாக வேறு ஒருவருடைய வழிகாட்டுதல்களையோ பின்பற்றுவதற்கு முயன்றால் நிச்சயமாக அவரின் வழிமுறை உண்மையான முஸ்லிமின் வழிமுறையை விட்டும் வேறுபட்டிருக்கும்.
1). அல்லாஹ்வுடைய வேதம் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகியவற்றை பின்பற்றுவது அல்லது
2). மனிதர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை, நம்பிக்கைகள் மற்றும் கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றுவது
என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.
முதலாவது பாதையைப் பின்பற்றினால், அல்லாஹ்வின் கருணையும், அவனது மன்னிப்பும் கிட்டும். இரண்டாவது பாதையைப் பின்பற்றினால், அது தவறான வழிக்கு இழுத்துச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.
முதலாவது பாதையைப் பின்பற்றினால், நேர்வழி கிடைக்கும். இரண்டாவது பாதையைப் பின்பற்றினால், அது வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும்.
முதலாவது பாதையைப் பின்பற்றினால், அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் கிட்டும். முதலாவது அல்லாத மற்ற எந்த பாதையைப் பின்பற்றினாலும் நரக நெருப்பைத் தவிர வேறு எதுவும் கிட்டாது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும். மேற்கூறிய விளைவுகளைக் கருத்தில் கொண்டு எந்தப் பாதையைப் தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வெரு தனி மனிதனின் விருப்பத்தைப் பொறுத்தது.
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந் (வந்து)ள்ளது;' ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் 18:29)
அல்லாஹ்வே மிக்க ஞானம் உடையவனாகவும், வல்லமை மிக்கோனாவும் இருக்கிறான்.
(இந்தக் கட்டுரையில் முஸ்லிம்களிடத்திலே பிரிவினைகள் ஏற்படுவதற்கான மூலக்காரணம் என்ன என்பதைப் பார்த்தோம். இனி வரும் கட்டுரைகளில் இஸ்லாம் என்ற போர்வையில் இன்று நம்மிடையே காணப்படும் பல்வேறு பிரிவுகளையும் அவைகள் ஒவ்வொன்றின் கொள்கைகளும் வழிமுறைகளும் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு மாறுபட்டிருக்கிறது என்பதை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.)

3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
'அஸ்மா" என்பதற்கு 'பெயர்கள்' என்று பொருள். 'ஸிஃபாத்' என்பதற்கு 'பண்புகள்' என்று பொருள். எனவே தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில், பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் இருப்பதாகும்.
அல்லாஹ்வின் பண்புகளில், ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ, அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது. இவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.
உதாரணமாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய 'அஸ் ஸமீவு', அதாவது 'எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன்'. ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ அல்லது சமாதியில் அடக்க மாகியிருப்பவருக்கோ, அல்லது ஒரு சிலைக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு உரிய இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு பங்களித்தன் மூலம் 'ஷிர்க்' என்ற மாபெரும் பாவமாகிய இணை வைத்தலைச் செய்தவராகிறார். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)
மற்றொரு உதாரணமாக, யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய 'அல் பஷீர்' அல்லது 'எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்' என்ற இந்தப் பெயரை, பண்பை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ, அல்லது இறை நேசருக்கோ, அல்லது கப்ரில் அடக்கமாகி இருக்கும் நல்லடியாருக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் அல்லது நம்பிக்கை கொண்டால் அவரும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் இந்த ஆற்றலாகிய அல்லாஹ் ஒருவனே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என்ற பெயரை, பண்பை, ஆற்றலை இணை வைத்தவராகிறாகிறார். இதன் மூலம் அவர் அல்லாஹ்வுக்கு 'ஷிர்க்' என்ற மாபெரும் இணைவைத்த குற்றவாளியாகிறார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)
இவைகள் அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கும் பொதுவான உதாரணங்களாகும்.
ஒருவர் தம் வாயால் வெளிப்படையாக கூறியோ அல்லது வெளிப்படையாக கூறாமல் தமது செயல்களின் மூலமாக அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதி செயல்பட்டாலும் அவரும் இணைவைத்தவராகவே கருதப்படுவார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம்மில் சிலர் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு அல்லாஹ் அல்லாதவர்களான இறந்தவர்களிடம் அவர்களுடைய கப்ருகளுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ அழைத்து அவர்களிடம் உதவி தேடுகின்றனர். மேலும் இவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி தங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் எனவும் கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு 'எங்கிருந்தாலும் கேட்கும் தன்மையும், எங்கிருந்துக் கொண்டும் எல்லாவற்றையும் பார்க்கும் தன்மையும் இருப்பதாக தவறுதலாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இருக்கும் ஒருவர் இந்தியாவில் உள்ள நாகூரில் அடக்கமாகி இருக்கும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களிடம் தமது தேவையைக் கூறி கேட்பதாக வைத்துக் கொள்வோம். இங்கே அவர்
'எங்கிருந்து அழைத்தாலும் கேட்கக் கூடியவன்',
'மனதில் உள்ள இரகசியங்களை அறியக் கூடியவன்',
'எந்த இடத்தில் இருந்துக் கொண்டும் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்'
என்பன போன்ற இறைவனுக்கு மட்டுமே இருக்கக் கூடிய இந்த பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ்வுக்கும் உண்டு என்று நம்புகிறார். இதுவும் 'தவ்ஹீதுல் உலுஹிய்யாவுக்கு' எதிரன 'ஷிர்க்' என்னும் இணை வைத்தலாகும். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திப்போம்.
அல்குர்ஆன் அத்தியாயம் 10, ஸூரத்து யூனுஸ் (நபி), வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
10:17 அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
10:18 தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும்.
அல்லாஹ் நம் அனைவரையும் அவனை மட்டுமே வணங்கக் கூடிவர்களாக ஆக்கி நம் பாவங்களை மன்னித்து சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.

2. தவ்ஹீதுல் உலூஹிய்யயா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வணங்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்வதற்கு "தவ்ஹீதுல் உலுஹிய்யா" என்று பெயர்.
அல்லாஹ் மடடுமே இப்பேரண்டத்தை படைத்து, பரிபாலித்து உணவளித்துக் கொண்டிப்பவன் ஆகையால் அவன் மட்டுமே வணக்கத்திற்கு முழு தகுதியுடையவன் ஆவான். வணக்கம் என்பது அல்லாஹ்தஆலாவிற்கே முழு உரிமையுள்ள ஒன்றாகும். எனவே அவனுடைய படைப்பினங்களான நாம் அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும், அதாவது தொழுகை, நோன்பு வைத்தல், ஜக்காத் கொடுத்தல், பிரார்த்தனை செய்தல், மன்றாடுதல், உதவி கோருதுல், நேர்ச்சை செய்தல், குர்;பானி கொடுத்தல், பேரச்சம் கொள்ளுதல் இன்னும் பிற அனைத்து வகையான வணக்கக்கங்களையும் அவனுக்கே செய்து அவனையே வழிபடவேண்டும் என நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீதுல் உலூஹிய்யா என்று பெயர்.
இந்த வகை தவ்ஹீதை ஏற்றுக்கொள்வதில் தான் எல்லாக் காலகட்டங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களை முன்னர் வாழ்ந்த முஷ்ரிக்குகளும், இணை வைப்பவர்களும் நிராகரித்து வந்தனர். இந்த முஷ்ரிக்குகள் இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்து வருபவன் அல்லாஹ்வே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர். ஆனால் அவனுக்கே முழு உரிமையான வணக்கங்களை அவனல்லாது பிறருக்கு செய்து வந்தனர்.
அவர்களாகவே பதிய கடவுளர்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவைகள் அவர்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என்று அவைகளை வழிபட்டு அல்லாஹ்வால் மன்னிக்கப்படமாட்டாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் செய்த குற்றவாளியாகின்றனர்.
தவ்ஹீது உலூஹிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: -
அல்குர்ஆன் அத்தியாயம் 27. ஸூரத்துந் நம்லி(எறும்புகள்), வசனங்கள் 59-65 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
27:59 (நபியே!) நீர் கூறுவீராக: 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?'
27:60 அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
27:61 இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
27:62 கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
27:63 கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
27:64 முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.'
27:65 (இன்னும்) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.'
ஆகையால் தவ்ஹீது உலூஹிய்யா என்பது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்பி அவனையே வணங்கி வழிபடுவதாகும்.

Subscribe to:
Posts (Atom)