எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 3:91)
சொர்க்கம் செல்வதற்கும் நரகத்தில் இருந்து விடுதலை அடைவதற்கும் இந்த உலக வாழ்க்கை ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது. ஏனெனில் இறை நிராகரிப்பாளராக ஒருவர் மரணித்து விட்டால் மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து நம்பிக்கையாளராக மாறுவதற்கு சந்தர்ப்பம் கண்டிப்பாக கிடைகாது. மறுமை நாளில் இறை நிராகரிப்பாளர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று திருமறையில் இறைவன் குறிப்பிடுகிறான்.
நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், ‘எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம் நாங்கள் முஃமின்களாக இருப்போம்’ எனக் கூறுவதைக் காண்பீர். (அல்-குர்ஆன் 6:27)
ஆனால் ஒருவருக்குக் கூட இரண்டாவது சந்தர்ப்பம் கிடைக்காது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ்ந்த, மறுமை நாளில் நரகத்துக்குரிய ஒருவரை ஒரு முறை நரகத்தில் முக்கி எடுக்கப்பட்டு பின்பு அவரிடம் ஆதமுடைய மகனே! நீ இங்கு ஏதாவது சுகத்தையோ அல்லது அருளையோ பார்க்கிறாயா என்று கேட்கப்படும். அவன் இறைவன் மீது ஆணையாக இல்லை என்று சொல்லுவான் .
இந்த உலகத்தில் கஷ்டத்துடன் வாழ்ந்த, மறுமையில் சுவர்க்கத்துக்கு உரிய ஒருவரை, ஒரு முறை சொர்க்கத்தில் முக்கி எடுக்கப்பட்டு அவரிடம் இங்கு ஏதாவது கஷ்டத்தையோ, துன்பத்தையோ பார்க்கிறாயா என்று கேட்கப்படும். அவர் இறைவன் மீது ஆணையாக இல்லை என்று சொல்வார்.
கட்டுரையின் ஆங்கில மூலம் : www.islamreligion.com