அல்லாஹ் கூறுகிறான்: -
அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)
இறைவனுக்கு ஓய்வு தேவையா?
“…for in six days the LORD made heaven and earth, and on the seventh day he rested, and was refreshed” (Exodus 31:17)
“…ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்..” (யாத்திராகமம் 31:17)
மாட்சிமையும் வல்லமையும் பொருந்தியவனான இறைவனுக்கு களைப்பு ஏற்படுமா? அவனுக்கு ஓய்வு தேவையா? நிச்சயமாக இல்லை! இத்தகைய பலஹீனங்கள் எல்லாம் இறைவனின் படைப்பினங்களுக்கு உரியதாகும். இறைவனை அரி, துயில் எதுவும் கொள்ளாது. அவன் மனிதர்களின் இத்தகைய கற்பனைகளை விட்டும் அப்பாற்பட்டவன்.
இறைவன் அகில உலக மனிதர்களுக்கு நேர்வழிகாட்டிட இறக்கியருளிய சத்திய திருவேதாகிய அல்-குர்ஆனிலே கூறுகிறான்: -
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)
இறைவன் தூங்குவானா?
ஆம் இறைவனும் துங்கி பின்னர் விழித்தெழுவார் - பைபிள்!
“அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,” (சங்கீதம் 78:65)
அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மனிதர்களின் பலஹீனங்களை விட்டும் தூய்மையானவன்! அவனை அரி, துயில், உறக்கம் போன்ற எதுவும் அவனை பிடிக்காது! - அல்-குர்ஆன்
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன” (அல்-குர்ஆன் 2:225)
இறைவன் நீதி தவறியவனா? அநீதி இழைப்பவனா?
“…எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.” (சங்கீதம் 7:6)
“தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை (யோபு 19:6-7)
அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள். (அல்-குர்ஆன் 10:44)
இறைவனின் வல்லமை: -
இறைவனோடு மல்யுத்தம் செய்தவர்: -
“And he said, Your name will no longer be Jacob, but Israel: for in your fight with God and with men you have overcome.” (Genesis 32:28)
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி வென்றதனால்’ என்றார். (ஆதியாகமம் 32:28)
அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக. (அல்-குர்ஆன் 50:45)
இறைவனை பார்க்க முடியுமா?
பைபிளின் பின்வரும் வசனங்களின் படி தேவனைப் பார்க்க முடியும!
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30)
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய், இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின் கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது. (யாத்திராகமம் 24:9-10)
மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக பின்வரும் வசனங்களின் படி தேவனைப் பார்க்க இயலாது!
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார். (யாத்திராகமம் 33:20)
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (I யோவான் 4:12)
பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்-குர்ஆன் 6:103)
இறைவன் உதவி செய்ய இயலாதவனா?
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன். (சங்கீதம் 39:12)
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? (சங்கீதம் 39:44:24)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக! (அல்-குர்ஆன் 2:186)
இறைவனைப் பற்றிய வர்ணனைகள்: -
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது. (II சாமுவேல் 22:8-9)
கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார். (II சாமுவேல் 22:11)
இறைவனின் இலக்கணங்கள் குறித்து அல்-குர்ஆன்!
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்-குர்ஆன் 16:74)
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்-குர்ஆன் 42:11)
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்-குர்ஆன் 6:93)
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்-குர்ஆன் 112:1-4)